Connect with us

#24 Exclusive

பொள்ளாச்சியை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த விசிக பிரமுகர் ! தோண்ட தோண்ட சிக்கும் முக்கிய தலைகள் !

பொள்ளாச்சியை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த விசிக பிரமுகர் ! தோண்ட தோண்ட சிக்கும் முக்கிய தலைகள் !

சேலம் மாவட்டம் மஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜ் இவர் க. க பாளையம் பகுதியில் வி சி க தொழிற்சங்க தலைவராக இருக்கிறார். இவர் சொந்தமாக இரண்டு ஆட்டோக்கள் வைத்திருப்பதுடன் தவணைக்கு பணம் கொடுக்கும் வியாபாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில் மோகன் ராஜ் மீது பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வெளியூரில் இருந்து வந்த தன்னை மோகன் ராஜ் அவரது ஆட்டோவில் கூட்டி சென்றதாகவும், தன்னை தவறான இடத்திற்கு கூட்டி சென்ற மோகன்ராஜ் தன்னை யாரும் இல்லாத இடத்தில் பலாத்காரம் செய்ததுடன் அதனை செல்போனில் படம்பிடித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு சில முக்கிய நபர்களுடன் செல்ல மிரட்டி வருவதாகவும் புகார் அளித்தார்.

Loading...
குற்றம் சாட்டப்பட்ட நபர்

இதனை அடுத்து ரகசியமாக சென்ற காவல்துறையினர் மோஹன்ராஜை கைது செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தபோது அதில் பல பெண்களை மிரட்டி மோகன்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருப்பதும் அவர்களை மிரட்டி பணம் பறித்திருப்பதும் தெரியவந்துள்ளது, மேலும் பல முக்கிய நபர்களுடன் மோகன்ராஜ் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களும் இவருடன் சேர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Loading...

இதனால் விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. சமூகத்தில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தின் போது விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம், உள்ளிட்டவற்றை நடத்தியதுடன் ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் கடுமையான வார்த்தையை பயன் படுத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது வி சி க தொழிற்சங்கத்தை சேர்ந்த நபர் சிக்கி இருப்பதை அடுத்து ஷாநவாஸ் போன்றோர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் போது இதற்கு என்ன பதில் சொல்வார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோர் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...

Trending