#BREAKING மலேசிய பிரதமர் வழியில் நேபாள் பிரதமரின் ஆட்டமும் முடிந்தது ! சாதித்தது மோடி அரசு

இந்திய ரா அமைப்பு இலங்கை, மலேசியா, ஆகியவற்றின் ஆட்சியை தீர்மானித்தது போல் தற்போது இந்தியாவிற்கு எதிராகவும் சீனாவிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த நேபாள் பிரதமர் கே பி ஒலியின் ஆட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.

Loading...

உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்ற மகாதீர் முகமது, இந்தியாவுடன் மலேசியா வழக்கமான நட்புணர்வுடன் இருந்ததை மாற்றி சில எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார், இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

மேலும் இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தலைமறைவான சாஹிர் நாயிக் என்பவருக்கு எந்த இஸ்லாமிய நாடுகளும் அடைக்கலம் கொடுக்கவில்லை, இந்தியாவை தேவையில்லாமல் பகைக்க வேண்டாம் என முடிவு எடுத்து அவ்வாறு ஈடுபட்டன,இந்த நிலையில் மலேசியா சாகிர் நாயிக்கிற்கு அடைக்கலம் கொடுத்தது அந்த முடிவை எடுத்தவர் மகாதீர் முகமது.

Loading...

இதனையடுத்து இந்தியா மலேசியாவின் முடிவிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தது, மலேசியாவின் முக்கிய ஏற்றுமதியான பாமாயில் இறக்குமதியை கணிசமான அளவு குறைத்தது, அதனை அடுத்து உள்நாட்டு அரசியலில் மகாதீர்க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது, இந்தியாவுடன் விரோத போக்கை கடைபிடிக்க வேண்டாம் எனவும், அது நமக்கு எதிராக முடியும் என எதிர்க்கட்சிகளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அறிவுறித்தின. அதோடு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் மேலும் புதிதாக பதவியேற்ற மலேசிய பிரதமர் இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணுவதாக அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நேபாள் பிரதமர் கே பி ஒளி இந்தியாவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு வந்ததுடன் இந்தியாவின் பகுதியை நேபாள் நாட்டுடன் இணைத்து சட்டம் நிறைவேற்றினார், இதனால் சீனாவிற்கு ஆதரவாக கே பி ஒளி செயல்படுவது வெளியான நிலையில், இந்தியா – சீனா இடையே போர் மேகங்கள் சூழும் நிலையில் நேபாள் நாட்டு அரசியலை இந்தியாவிற்கு சாதகமாக மாற்ற ரா அமைப்பு களத்தில் இறங்கியது.

குறிப்பாக கே பி ஒளிக்கு ஆதரவாக இருந்த நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் பராசந்தா ஒளி தற்போது உடனடியாக நேபாள் பிரதமர் கே பி ஒளி பதவி விலகவேண்டும் இல்லை என்றால் கட்சி ஒரு வாரத்திற்குள் இரண்டாக உடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கே பி ஒளிக்கு எதிராக கட்சி கூட்டத்தை நாளை பரசாந்த ஒளி கூட்ட இருப்பதாகவும் நாளை நேபாள் பிரதமர் ஒளிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவருக்கு பிறகு வேறு ஒருவர் நேபாள் பிரதமராக தேர்ந்தெடுக்க படலாம் எனவும் கூறப்படுகிறது, இந்நிலையில் நேபாள் எல்லையை காரணம் காட்டி இந்தியாவை மிரட்ட நினைத்த நேபாளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பு ரா ஆப்பு வைத்து விட்டது.

விரைவில் கே பி ஒளியின் ஆட்டம் முடிவு அடைவதுடன் நேபாள் நாட்டில் இந்தியாவிற்கு ஆதரவான பிரதமர் விரைவில் பதவி ஏற்பார் என்று இப்போதே நேபாள ஊடகங்கள் பேசி வருகின்றன.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*