Connect with us

#24 Exclusive

திமுகவில் இருந்து விலகினார் முக்கிய புள்ளி ! குடும்ப அரசியலை எதிர்த்து உருக்கமான கடிதம் !

திமுகவில் இருந்து விலகினார் முக்கிய புள்ளி ! குடும்ப அரசியலை எதிர்த்து உருக்கமான கடிதம் !

திமுகவை சேர்ந்த முக்கிய பேச்சாளர் முசிறி மன்னன் மற்றும் பிரசன்னா போன்றோர் உதயநிதியின் வருகையால் ஓரம்கட்டப்படுகிறார்கள் என்றும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை என்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம்தான் கட்சியில் இருக்கிறது, என்று பேச்சுக்கள் அதிகமாக பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்ட சூழலில்..,

நாங்கள் உழைக்க நீங்கள் மட்டுமே ஆளவேண்டுமா? என்ற 14 முக்கிய கேள்விகளை முன்வைத்து குடும்ப அரசியலை கடுமையாக சாடி வெளியேறியிருக்கிறார் முசிறி தமிழ்மன்னன், அவர் எழுதிய உருக்கமான கடிதம் பின்வருமாறு :-

Loading...

அனுப்புநர்

Loading...

முசிரி தமிழ் மன்னன்
2/168 பிரபாகரன் இல்லம்
அறிஞர் அண்ணா நெசவாளர் காலனி
முசிரி – 621211
திருச்சி, தமிழ் நாடு

பெறுநர்

திரு தி.மு.க தலைவர் அவர்கள் மற்றும் திரு திமுக பொதுச் செயலாளர் அவர்கள்
திராவிட முன்னேற்ற கழகம்
அண்ணா அறிவாலயம்
சென்னை – 600018

பொருள்

தி.மு கழக சொற்பொழிவாளர் தி.மு.க திருச்சி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முசிறி பேரூர் கழக ஒன்றிய பிரதிநிதிமற்றும் கழக உறுப்பினர் விலக காரணமும் விளக்கி எழுதும் விடை பெறும் மடல்.

பேரன்புடையீர் வணக்கம்

திரு தி.மு கழக தலைவர் மற்றும் தி.மு.க பொதுச் செயலாளர் அவர்களுக்கு முசிரி தமிழ் மன்னன் எழுதும் விடை பெரும்விளக்க கடிதம் என்னவென்றால்

 1. ஆண்டான் அடிமை கொள்கையால் விடுதலை பெற என் முன்னோர்கள் தி.மு.க-விலும் பின்பு தி.க-வில் இனணந்துபணியாற்றிய குடும்பத்தில் பிறந்தவன்(நான்) முசிறி தமிழ் மன்னன்.

 • பெற்றோர் வைத்த பெயரை மாற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள். 1980 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழர்திருநாள் கழக பொதுக்கூட்டத்தில் என் பெயரை தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றினார். அன்று முதல் என் பெயர் முசிறிதமிழ் மன்னன் ஆகும்.

 • 1980 – முதல் தலைவர் கலைஞர், பேராசிரியர் எஸ்.ஜே.சாதிக், மு.க ஸ்டாலின், வைகோ, எஸ்.ஜி, வெற்றி கொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், க.சுப்பு, துரைமுருகன், ரகுமான் கான், S.P.சற்குணம், கோவை.மு.இராமநாதன், கோவை மணியன், சே.கந்தப்பன் – கொள்கை பரப்பு செயலாளர் காலம் முதல் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல், தமிழகமெங்கும் முக்கிய ஊர்களிலும் கிராமங்களிலும், கழக மேடையில் மேற்கொண்டவர்களுடன் இணைந்தும்தனியாகவும் பேசிய சொற்பொழிவாளன் முசிரி தமிழ் மன்னன்.

 • தி.மு.க இளைஞரணி தி.மு கழகத்தின் உறுப்பினராக பணியாற்றி வந்த நிலையில் எனக்குரிய அங்கீகாரம் வழங்கபெறவில்லை அல்லது கிடைக்கவில்லை. அதே நேரத்தில் என் உறவினர்கள் திருச்சி, பெரியகுளம், பவானி மற்றும் போடிநாயக்கனூர் தொகுதியில் எனது உறவினர்கள் காங்கிரஸ் மற்றும் AIADMK-வில் MLA- வாக இருக்க முடிந்தது. சாதிஒழிப்பு தி.மு.க-வில் ஏன் MLA-வாக யாரும் வரமுடியவில்லை மேலும் இராஜ்ஜிய சபா டெல்லி மேல்சபை உறுப்பினராக(MP) ஏன் அந்த வாய்ப்பு வழங்கவில்லை.

 • தி.மு.க-வினால் குறுநில மன்னர்களையும், குடும்ப ஆதிக்கத்தையும் வளர்ப்பது சரியா? தி.மு.க ஒரு குடும்பத்திற்கும்மற்றும் ஒரு சில குடும்பங்களுக்கும் சுமார் 200 பேருக்காக மட்டும்‌ ஒரு கோடிக்‌கும்‌ மேல்‌ உள்ள தொண்டர்கள்‌ என்‌ போன்றதொண்டர்களும்‌ உழைக்க வேண்டியுள்ளது. வாழ்க தி.மு.க ஜனநாயகம்‌.

 • AIADMK-வில் எந்த சாதியை சேர்ந்தவர்களும் முக்கிய பொறுப்புக்கு வர முடிகிறது, தி.மு.கவில் தொண்டன் உழைத்துகொண்டு தான் இருக்க வேண்டுமா?

 • தி.மு.க-வில் சாவு தொண்டனுக்கு சரித்திரம் தலைவனுக்கு என்பது வரலாறு தொடர்கிறது.

 • தி.மு.க பேச்சாளர்களை, தி.மு.க மாவட்ட செயலாளர் கேவலமாக பேசினார். அந்த மாவட்டத்தில் உள்ள முதன்மைசெயலாளர் இன்நாள் பொருளாளர் துரைமுருகன் அவரை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்க முடியவில்லை.

 • தி.மு.க பேச்சாளருக்கு தி.மு.க-வில் வேலையில்லை. Corporate பேச்சாளர்களுக்கு தி.மு.கழகம் தலைமை கொட்டிக்கொடுக்கிறது. தி.மு.க-வில் உள்ள 100-பேச்சாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் மற்றும் மிகவும் கஷ்டமான நிலைஎன்பதே உண்மை.

 • நமக்கு நாமே பிரச்சார பயணம் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பேசிய பின் 10-10-2015 வேலூர் கிழக்குமாவட்டத்தில் பங்கேற்று பேச புறப்பட்ட போது 9-10-2015 குளித்தலை இரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி எனது ஒருகால் துண்டானது எனது மனைவியின் நகையும் முன்னாள் அமைச்சர் நேருவின் உதவியாலும் என் நண்பர்கள் உதவியாலும்நான் உயிர் பிழைத்தேன். கழக அறக்கட்டளை மூலம் என் மகன் படிப்பு செலவிற்காக ரூ.25,000 அனுப்பியதற்கு என் நன்றி.

 • திருச்சி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்ற முறையில் மற்றும் பேச்சாளர் என்ற வகையிலும்பாராளுமன்ற தேர்தலில் அன்னான் நேரு கொடுக்க சொன்ன காசு என் கையில் பாதியாகத்தான் வந்தது. கழகம் உதவிசெய்யும் என்ற இளவு காத்த கிளி கதை போல ஆகிவிட்டது என் கதை இது வரை ஒன்றும் நடக்கவில்லை.

 • CPI, CPIM போன்ற அரசியல் கட்சிகளுக்கு பல கோடி ரூபாய் கொட்டி கொடுக்க தி.மு.க-வுக்காக 40 ஆண்டு காலம்பேசிய பேச்சாளன் எனக்கு உதவவில்லையே ஏன் ஏன் ? ஒரு காலை இழந்து தொடர்ந்து பணியாற்றுபவர்க்கு கழகம்செய்யும் உதவி யாது?

 • எனக்கு பின் கட்சிக்கு வந்த நண்பர்கள் பல்வேறு உயர் பதவிகள், அமைச்சர், MP,MLA, தலைமை கழக நிர்வாகி, சிறுதம்பிகள் கூட இன்று எனக்கே அண்ணன்கள் ஆகிவிட்டார்கள். சட்ட எரிப்பு போராட்டம் உள்பட பல்வேறுபோராட்டங்களில் பங்கேற்றவன் இந்த முசிறி தமிழ் மன்னன்.

 • உறுப்பினர், பேச்சாளர், அணி அமைப்பாளர், ஒன்றிய பிரதிநிதி பொறுப்பில் இருந்து விடை பெறுகிறேன். தி.மு.கஎன்பது தொண்டர்களுக்கு பாதுகாப்பு இயக்கம் என கருதி இருந்ததால் எந்த உயர்வும், எந்த உணர்வும் கிடைக்காதுஎன்பது நிதர்சனமான உண்மையே. கழக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், ஒருங்கிணைந்த திருச்சிமாவட்ட கழக தோழர்களும், கழக பொது செயலாளர், தலைவருக்கும் விடை பெறும் வணக்கம். விடை பெறுகிறேன்! வாழ்கதி.மு.க! வாழ்க தலைவர் கலைஞர் குடும்பம் மற்றும் உறுப்பினர் கால்களுக்கு என் கண்ணி. இவ்வளவு காலம் தண்ணீர்உணவு தந்து காப்பாற்றிய திமுக தொண்டர்களுக்கு வணங்கி விடை பெறுகிறேன்! நன்றி வணக்கம்!

தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுபோன்ற பல மூத்த தலைவர்கள் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் அதிமுக, பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending