Connect with us

#24 Exclusive

வருமான வரித்துறை சோதனை எதிரொலி விஜய்யின் சம்பளம் பிகில் வசூல் வெளியானது? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னை :-

AGS சினிமாஸ் நிறுவனம், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படமானது 300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில், 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரத்தின் இல்லம், அலுவலகம் மற்றும் அவர்களது நான்கு திரையரங்கங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெறும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சோதனை முடிவில் தெரியவரும்.

Loading...

இந்தநிலையில், பிகில் படத்தில் நடித்திருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த விஜயிடம், ஆறு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Loading...

அர்ச்சனா நிகழ்ச்சி ஒன்றில் பிகில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 140 கோடி வசூல் செய்ததாக கூறினார்., ஆனால் வருமான வரித்துறை சார்பில் நடத்தப்பட்ட 100 கோடி அளவு கூட மொத்த வருமானமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது மேலும் விஜய்யின் பிகில் பட சம்பளம் 50 கோடி என கூறப்பட்ட நிலையில் 20 கோடிதான் சம்பளம் என விசாரணையில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விஜய் ரசிகர்கள் பிகில் படம் 300 கோடி என கூறிவந்த நிலையில் அனைத்தும் பொய்யா என்று கவலையில் ஆழ்ந்துள்ளனராம், வருமானவரித்துறை ஒன்று வருமானத்தை காட்டுங்கள் இல்லை அர்ச்சனா பேசிய தொகைக்கு வருமான வரியை கட்டுங்கள் என ஒரே வார்த்தையில் பேசிவிட்டார்களாம், ஆக மொத்தத்தில் விஜய் பா சிதம்பரம் போன்று வரி ஏய்ப்பு வழக்கில் சிக்குவாரோ என்ற பதற்றமும் உருவாகியுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending