இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா…

நம்மோடு நெருங்கி பழகியவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் மற்றும் நம் உறவினர்கள் ,நம் நண்பர்கள் என நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறந்து விட்டால் சில நேரங்களில் நமது கனவில் அவரது முகங்கள் மற்றும் அவரது தோற்றங்களும் கனவில் வருவது நிகழ்வு. அவ்வாறு இறந்தவர்கள் நம் கனவில் வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி நாம் பார்ப்போம்.

Loading...

நமக்கு நெருங்கிய சிலர் யாராவது இறந்து விட்டது போல நமக்கு கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தமாம். அதுபோல் இறந்து போனவர்களை நாம் தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேருமாம்.அதுபோல் ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் அது நமக்கு நல்லது கிடையாது. அதுபோன்று ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இறந்து போன தாய் , தந்தையை கனவில் கண்டால் கனவு காணும் நமக்கு வரப்போகும் ஆபத்துக்களை அவர்கள் தங்களது வருகையை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தம். எனவே தாய் அல்லது தந்தை இறந்து போன பிறகு நம் கனவில் வந்தால் நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறது என்று நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். இயற்கையாகவே சிலர் இறந்து இருப்பார்கள். அவ்வாறு இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கனவுகள் சம்பந்தப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

Loading...

குறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கநேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும். எனவே நம் முன்னோர்கள் நம் கனவில் வருவது மிகவும் நல்லது தான் அவர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு என்பதற்கான அர்த்தம் அது.ஆனால் விபத்து தற்கொலை போன்ற மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில தீமைகள் ஏற்படும். மேலும் அந்த கனவுகள் வந்து சென்றபின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*