இனி திமுகவினருக்கு ‘வடை’ கிடையாது நூதன தண்டனை எதற்காக தெரியுமா?

இனி திமுகவினருக்கு ‘வடை’ கிடையாது நூதன தண்டனை எதற்காக தெரியுமா?

Loading...

பொள்ளாச்சி !

பொள்ளாச்சி டீக்கடையில் ஓசியில் வடை கேட்டதும் இல்லாமல் டீக்கடைக்காரர் பணத்தையும் பறித்து சென்ற திமுக பிரமுகரால் தற்போது வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Loading...

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் டீக்கடையில் பணிபுரிபவர் பக்ருதீன், இவர் பணிபுரியும் கடைக்கு இரவில் வந்த பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகர் லிங்கத்துரை மற்றும் அவரது நண்பர் தாஸ் இருவரும் சூடாக வடை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள், வடைக்கு பணம் கேட்ட போது யாரிடம் பணம் கேட்கிறார் என்று மிரட்டிய நேரத்தில், பக்ருதீன் பாக்கெட்டில் இருந்த வியாபார பணம் 9600 ரூபாயை பறித்து கொண்டு ஓடியிருக்கிறார்கள். தற்போது இதுகுறித்து காவல்நிலையத்தில் டீ கடை உரிமையாளர் மற்றும் பக்ருதீன் அளித்த புகாரில் காவல்துறையினர் லிங்கத்துரை மற்றும் அவரது நண்பர் தாஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த டீக்கடை உரிமையாளர் இனி திமுக கரைவேட்டி கட்டிக்கொண்டு கடைக்குள் யார் வந்தாலும் வடை இல்லை என சொல்லிவிடு என கோபமாக உத்தரவிட்டுள்ளாராம். தற்போது ஓசி பச்சி, ஓசி பிரியாணி வரிசையில் ஓசி வடையும் இணைந்துள்ளதால் திமுகவினர் கடும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*