மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் பலி!

மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் பலி!

Loading...

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம் ஆன ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் மரகதப்பச்சை கல் வெட்டி எடுக்கப்படும். சீனாவை ஒட்டிய மியான்மர் எல்லையில் பச்சை மரகதக் கற்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இந்த பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில்

தொழிலாளர்கள் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். தற்போது அதே சூழ்நிலையில் மீண்டும் இந்த ஆண்டில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தன. தற்போது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே அதிகளவு கனமழையானது பெய்து வந்துள்ளதால், இந்நிலையில், அப்பகுதி முழுவதும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் சுரங்கத்தில் திடீரென

Loading...

நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 50 தொழிலாளர்கள் மண்ணில் சிக்கிக்கொண்டு உயிரிழந்து உள்ளனர். மற்றும் இச்சம்பவ குறித்து மீட்புக்குழுவினர் விரைந்து அங்கு மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்செய்தி அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*