அந்த பிரபல பத்திரிகை சொன்ன தகவல் பொய்யாம் சிக்கிவிட்டார்கள் !

சமீபத்தில் வைரலான கலந்துரையாடல் ஒன்றில் பிரபல பத்திரிகையாளர் பாண்டேவிடம் சென்னை ஐ ஐ டி -யில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாகவும் சாதி வாரியான இடங்களே நிரப்பபடவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு யார் சொன்ன என்ன ஆதாரம் என்று கேட்க அவர் ஒரு முன்னணி மீசைக்காரர் பத்திரிகை பெயரை குறிப்பிட்டார் அதில் கேள்வி குறி போட்டபின்பு எப்படி 100% உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டிருந்தார்.

Loading...

இந்நிலையில் அந்த பத்திரிகை சொன்ன செய்தி பொய் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் மிக உயரிய கல்விக் கூடம் எனவும் உலக அளவில் குறிப்பிடத்தக்க இடத்திலும் உள்ளது, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (IIT). இன்று இந்தியாவில் 23 இடங்களில் IIT உள்ளது. இது இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மூலம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது.

Loading...

சமீபத்தில், ஃபாத்திமா என்ற கேரளா பெண், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருந்தத்தக்க நிகழ்வை அரசியலாக்கும் விதமாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

“இங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்கு உரிய பொது விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை; மாணவர்களிடையே மேல்தட்டு மற்றும் ஜாதிப் பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது; மாணவர்கள் குறைதீர்க்க அமைப்புகள் இல்லை; குறிப்பாக பட்டியலின மாணவர்கள், உள்ளே நுழைய வாய்ப்பே இல்லை” என்றெல்லாம் கூறப்படுகிறது.

இவை உண்மையா என்று பார்க்கலாம்:
ஐஐடி கல்வி நிறுவனமானது நிர்வாகக்குழு (Board of Governance), மேல்சபை (senate) துணை மேல்சபை (Senate sub committee) மூலம் இயங்குகிறது. அவர்களுக்கு உதவ நிர்வாகம், கல்வி, ஆராய்ச்சி, பாடத்திட்டம், நிதி போன்றவற்றிற்கு பேராசிரியர்கள் – மாணவர்கள் குழு அமைக்கப்பட்டு, கருத்துக்கள் பெறப்பட்டு, அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த மேல்சபை துணைக்குழு முழுக்க முழுக்க சுதந்திரமாக இயங்கக்கூடிய அமைப்பு.

இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து செயல்படும் விதமாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பணியிலும் படிப்பிலும் உள்ளனர் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதது.

23.10.2019 இல் வெளிவந்த ஆசிரியர் பணி நியமன விதிகள் மற்றும் விளம்பரமே இதற்கு சாட்சி. ஏனெனில் பணிநியமன விதிகள் மற்றும் நிர்வாகத்தை கண்காணிக்க, கேள்வி எழுப்ப, முறையிட, ஒவ்வொரு நிலையிலும் அதற்கான அமைப்புகள் இருக்கின்றன.
இங்கு இஸ்லாமிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது.

ஆனால் அரசின் இட ஒதுக்கீடு முறையான 22.5% பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கும் (7.5% பழங்குடி, 15% பட்டியல் இனம்), 27% இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள் பொதுவுக்கும் ஒதுக்கப்படுகிறது. இந்த முறையே மாணவர்கள் சேர்க்கையிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் இது அகில இந்திய அமைப்பாகையால், தமிழ்நாட்டில் உள்ளது போல், பிற்படுத்தப்பட்டோரில் இஸ்லாமிய உள்ஒதுக்கீடு, பட்டியல் பிரிவில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு கிடையாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்பதும் கிடையாது. மேலும், தரவரிசைப் பட்டியலில் பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் அதிக மதிப்பெண் பெற்றால் அவர்கள் பொதுப்பிரிவில் உள்ளே வர முடியும். ஆனால் பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் இருந்தாலும், பொதுப்பிரிவினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின இடங்களை பெற முடியாது.

மாணவர்களின் பொதுவான குறைகளை முறையிட குறைதீர்க்கும் குழு, பெண்கள் சம்பந்தமான பாலியல் குறித்த குற்றங்களை முறையிட மனிதவள மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் குழுவின் வழிகாட்டுதலில் பதிவாளர், பேராசிரியை, கல்வி நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு பெண் உள்ளிட்ட குழு என, அனைத்து விதிகளும் இருக்கிறது.

இங்கே மாணவர்கள் தேர்வு முறையும் வெளிப்படையாக, JEE மூலம் மதிப்பெண் பட்டியல் இடப்பட்டு, அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள IITல் படிக்க, அவர்களின் விருப்பம் மற்றும் துறையில் உள்ள இடங்கள் இருப்பு நிலையின் அடிப்படையில், இணையத்தின் மூலமே நிரப்பப்படுகிறது. இப்பட்டியலில் பழங்குடியினர் மாற்றுத் திறனாளிகள் குறிப்பிட்ட மதிப்பெண்ணிற்கு கீழே பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட முடியாத சூழலில், மாற்றுத்திறனாளிகள், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் 30 முதல் 40 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு வருடம், ஆயத்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகியவற்றில் இரண்டு பருவ நிலை தேர்வுகள் முடித்த பின்னர், B.Tech மற்றும் dual degree படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். அந்த ஒரு வருடத்திற்கு தங்கும் வசதி, பிற சலுகைகள், மற்ற மாணவர்களைப் போலவே இவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
உணவு முறைகள் பற்றி பல வதந்திகள் சொல்லப்படுகிறது. பொதுவாக, ஐஐடியில் பெரும்பாலும் சைவ உணவுகளே வழங்கப்படுகிறது. அசைவ உணவிற்கு என சிறப்பு கவுண்டர்கள் உண்டு. அதில் தேவைப்படும் மாணவர்கள், பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மற்றபடி தனியாக சாப்பிடும் இடம், கை கழுவும் இடம் என்பதெல்லாம் கிடையாது. அவர்களின் உணவுப்பட்டியல் கூட மாணவர்களே முடிவு செய்கிறார்கள்.

மாணவர்களுக்கென தனி சங்கங்கள், அமைப்புகள் இல்லை எனவும் குற்றம் வருகிறது. ஆனால் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட, பல அமைப்பு முறைகள், தேர்தல் வைத்து மாணவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டுவருகிறது. மாணவர்கள் குறைகள் தீர்க்க,
பேச்சாளர் மாணவர் சட்டமன்ற குழு (Speaker student Legislative Council)
இணை பாடத்திட்ட விவகாரக் குழு (Co curricular Affairs)
கல்வி விவகாரங்கள்,
விளையாட்டு, ஆராய்ச்சி விவகாரங்கள்,
கலை மற்றும் கலாச்சார விவகாரம், தகவல்கள், பொது என
பல பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு, வெளியே செல்லும் இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து பொறுப்புகள், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படி மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் பணியிடம், உணவு விவகாரம், பயிற்சி என அனைத்திற்கும் இங்கு எழுப்பப்படும் பிம்பங்கள் வேறு, உண்மை நிலை வேறு.

ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் என்பது, புறச் சூழல்களால் ஏற்படுவதல்ல. கல்வியில் மிகவும் மேம்பட்ட நிலையில் (Creamy layer) உள்ள மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களில் அதிகம் பயில்கிறார்கள். இதனால் சில மாணவர்கள், தாழ்வு மனப்பான்மை கொண்டு, அதன் காரணமாக விபரீத முடிவுகளை எடுப்பதாக, மாணவர்களே கூறுகிறார்கள். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதற்குரிய சூழலை ஏற்படுத்துவது பற்றி பேசாமல், இதனை அரசியலாக்குவது, பிரச்சனைகளை களைவதற்கு அல்ல திசை திருப்பவே பயன்படும்.

பேராசிரியர்
Dr.R. காயத்ரி.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*