Connect with us

#24 Exclusive

அடித்த அடி வேலை செய்கிறது. மறக்கமாட்டேன் ஸ்டாலின் எச்சரிக்கை !

தருமபுரி :- திமுகவின் பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் இன்று தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் திமுகவின் பொதுக்குழு விளக்கம் குறித்து பேசுவதை விட ஊடகங்களையும் சமீபத்தில் எழுந்த மிசா சர்ச்சை குறித்தே எச்சரிக்கை விடுத்தார்.

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான பொன்முடி ‘வின்’ தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெறியாளர் மதன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது திமுக தலைவர் மிசா காலத்தில் சிறை சென்றாரே தவிர, மிசாவினால் சிறை செல்லவில்லை என்றும் ஷா கமிஷனின் ரிப்போர்ட்டில் ஸ்டாலின் பெயர் இல்லை என்றும் கேள்வி எழுப்ப அதற்கு பொன்முடி அதைப்பற்றிய முழு விபரம் தெரியவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று திமுகவிற்கு எதிர் நிலையில் உள்ள கட்சிகளும், மிசாவில் தான் சிறையில் சென்றதாக திமுகவினரும் சமூகவலைத்தளங்களில் மோதலில் ஈடுபட்டு வந்தனர், தற்போது இன்று தர்மபுரியில் பேசிய ஸ்டாலின் தமிழக ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்தார், முக்கிய பிரச்சனைகளை விவாதம் செய்வதை விட்டுவிட்டு ஸ்டாலின் மிசா காலத்தில் சிறை சென்றாரா என்று விவாதம் செய்கின்றனர்.

Loading...

நான் மிசாவில் ஒரு வருடம் சிறையில் இருந்ததை விட இந்த (சில சர்ச்சையான வார்த்தையை பயன்படுத்தி ) இவர்கள் விமர்சனம் செய்வதை மறக்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார் அதே நேரம் நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என்றும் கூட்டத்தில் பேசினார்.

Loading...

இந்நிலையில் ஸ்டாலின் மறைமுகமாக பத்திரிகையாளர்கள், சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிடும் சிலரை குறிவைத்து எச்சரிக்கை செய்வது போன்று பேசியிருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு வழியாக சமூகவலைத்தளங்களில் அடித்த அடி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பதில் சொல்லும் அளவிற்கு வந்துவிட்டதாகவும் வரும் காலத்தில் இதுபோல் இந்து மதம் குறித்த விமர்சனம் போன்றவற்றிற்கும் ஸ்டாலின் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று வலதுசாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...

Trending