1400 கிலோ மீட்டர் சுவர் எழுப்புகிறது மோடி அரசு ஐ நாவில் சொல்லிய அடுத்த மாதமே செயலில் இறங்கியது.

1400 கிலோ மீட்டர் சுவர் எழுப்புகிறது மோடி அரசு ஐ நாவில் சொல்லிய அடுத்த மாதமே செயலில் இறங்கியது.

Loading...

மோடி அரசு தற்போது உள்நாட்டு அரசியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய கையோடு தற்போது புவியின் தன்மையை இயற்கையாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக கடந்த மாதம் ஐ நாவில் 2030-ம் ஆண்டிற்குள் இந்தியா மிக பெரிய மாற்றத்தை பருவநிலை மாற்றத்தில் உண்டாக்கும் என்று பேசியிருந்தார். தற்போது அதற்கு முன்னோட்டமாக 1400 கிலோமீட்டர் தொலைவிற்கு பசுமை சுவரை எழுப்புகிறது மத்திய அரசு.

Loading...

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம்
பூமி பாலைவனமாதல், காடுகள் அழிதல், காற்றுமாசுபடுதல் இதைப்பற்றி பல நாடுகளின் தலைவர்கள் பல இடங்களில் நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள், ஆனால் செயலில் இறங்கவில்லை.

இந்தியாவில் கடந்த மாதம் டெல்லியில் “United Nations convention to combat” என்கிற மாநாடு நடைபெற்றது. இந்த “UNNCCD” என்கிற அமைப்பில் 190 நாடுகள் உள்ளது.

இந்த நாடுகள் இணைந்து conference of parties/cop 14 என்கிற பெயரில் ஒரு மாநாடு
நடத்தியது.அதில் கலந்து கொண்ட மோடி
பல்வேறு நாடுகளை சேர்ந்த 6000 பிரதிநிதிகளுக்கு முன்னிலையில் பூமி பாழடைந்துபாலைவனமாகி வருவதை தடுக்க இந்தியா போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருகின்ற 2030ம் ஆண்டுக்குள் நிலச்சீரழிவினை தடுக்கும் வகையில் இந்தியா மிகப்பெரிய அளவில் சாதித்து இருக்கும் என்றார். இ து நடைபெற்று 1-மாதமே முடிவடைந்த நிலையில் மத்திய அரசு குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பசுமை சுவர் எழுப்ப திட்டம் உருவாகி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத்தொடர் வழியாக சுமார் 1400 கிலோமீட்டர் தூரத்துக்கும், 5 கிலோமீட்டர் அகலத்துக்கும் மரங்களை வளர்த்து பசுமைச்சுவர் அமைக்க மோடி அரசு திட்டம் தீட்டி வருகிறது.

இந்த பசுமைச் சுவர் அமைக்கப்பட்டால் தார்பாலைவனத்தில் இருந்து பல்வேறு மாநிலங்க ளை தாக்கும் வெப்பக்காற்று தடுக்கப்படு ம் அதோடு 26 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் வளர்க்கப்படுவதால் பருவ நிலை மாற்றமே ஏற்படும்.

அதாவது தார்பாலைவனத்தின் தன்மையே
மாறிவிடும். காற்று மாசுபாடு குறையும்
நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் மழை வளம்
அதிகரிக்கும். இந்த பசுமை புரட்சியை அதாவது பசுமை சுவரை வருகின்ற 2030 ம் ஆண் டுக்குள் நிறைவேற்றி முடிக்க மோடிமுடிவு செய்துள்ளார்.

அனேகமாக 2050 – ம் ஆண்டில் தார் பாலை
வனத்தில் கூட விவசாயம் நடைபெறலாம்.
இதே மாதிரி ஆப்ரிக்காவில் சகாரா பாலை
வனத்தை ஒட்டிய நாடுகள் இணைந்து ஒரு
பசுமை சுவரை உருவாக்கி சகாரா பாலை
வனத்தோடு சேர்ந்து .பாலைவனமாகி கொண்டு. வரும் ஆப்ரிக்க நாடுகளை காத்துவிடலாம் என்று ஒரு மிகப்பெரிய திட்டத்தை தொடங்கினார்கள்.

காம்பியாவில் இருந்து டிஜிபோதி வரை சுமார் 7600 கிலோ மீட்டர் தொலைவிற்கு 15
கிலோ மீட்டர் அகலத்திற்கு நைஜீரியா. சூடான் எத்தியோப்பியா வழியாக மரங்கள் வளர்த்து காடுகளாக மாற்றி அவற்றையே பசுமை சுவராக எழுப்பி ஆப்ரிக்க நாடுகளின்
பருவ நிலை மாற்றத்தை தடுக்கவும் நிலங்கள் பாலைவனமாகி வருவதை தடுக்கவும் ஐ.நா சபையின் உதவியுடன் ஆப்ரிக்கா பசுமை சுவர் என்கிற பெயரில் ஒரு திட்டம் நடைபெற்று வருகிறது.

2007-ல் ஆரம்பிக்க பட்ட இந்த திட்டத்தில் 20 ஆப்பிரிக்க நாடுகள் ஆப்ரிக்க யூனியன் அரபு யூனியன் ஐரோப்பிய யூனியன் ஐநாவின் UNNCCD, உலக வங்கி என்று சுமார் 25 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த திட்டத்தில்
இணைந்துள்ள பொழுதும் பணிகள் இன்னும்
ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது.

2037 -ம் ஆண்டுக்குள் இந்த ஆப்ரிக்க பசுமை
சுவரை உருவாக்கி விட வேண்டும் என்று
திட்டமிட்ட நாடுகள் இன்னும் 50 ஆண்டுகள்
முடிந்தாலும் இதை நிறை வேற்றி விட முடியாது. ஆனால் அதற்குள் இந்தியா இன்னும் 10 வருடத்திற்கு ள் பசுமை சுவரை எழுப்பிவிடும்.

அதற்கு ஒரே காரணம் மத்திய அரசின் திட்டமிட்ட காரணம்தான் என்கிறார் விஜயகுமார் அவர்கள்.

வரும் காலத்தில் புவியின் தன்மையினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மக்கள் அதிகமாக பதிப்படைவார்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இறங்கியது உலக நாடுகளுக்கே முன்னோட்டம் என்றும் இந்தியா தன்னை தாண்டி உலகத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாக நியூஸிலாந்தை சேர்ந்த பிரபல புவியியலாளர் டேவிட் பெண்கொம் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

மரங்கள் வெட்டப்படும் காலத்தில் 25 ஹெக்டேர் பரப்பிற்கு மரங்களை நடும் மத்திய அரசின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது என சுற்று சூழல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*