தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோவில்கள் இனி உலகிற்கு வழிகாட்டியாக மாற போகிறது பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு !

ஒவ்வொரு நாடும் அந்த நாட்டிற்கு என்று தனியாக இயற்கையான வைத்தியங்கள் , மருத்துவ முறைகளை வைத்திருக்கும் அந்த வகையில் இந்தியாவின் மருத்துவம் என்பது இயற்கையான ஆயர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் தான் பல நூறு ஆண்டுகளாக இந்த மருத்துவம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வந்துள்ளது.

Loading...

ஆனால் பல்வேறு காலகட்டத்தில் அவை முழுவதும் மறைந்து தற்போது எந்தவித அடையாளமும் இன்றி 90 % அழிந்து வருகின்றன, இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 2017 – ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஆராய்ச்சி துறையை சேர்ந்தவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றனர், அதில் நம் நாட்டின் வைத்திய முறைகள் அது தவிர பல்வேறு தொழில் குறிப்புகள் இந்தியாவில் உள்ள கோவில்களில் புதைந்து கிடப்பதாகவும் அதில் 50 % அளவிற்கு மறைந்து விட்டன.

மீதம் இருப்பதை ஆராய்ச்சி செய்தால் மிக பெரிய அளவில் நமக்கு மருத்துவம், தொழில் ரகசியம், விஞ்ஞான யுத்திகள் முதலியவற்றை பற்றி மிக பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கலாம் என தெரிவித்து அதற்கு சில ஆதாரங்களையும் அனுப்பியிருக்கின்றனர்.

Loading...

அதன் அடிப்படையில் ஆராய்ச்சியை தொடங்க மோடி திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான நம்பிக்கையான குழுவை உருவாக்க அவர் முடிவெடுத்து அதற்கென மொத்தமாக 1000 கோடிக்கு மேல் ஒதுக்க இருப்பதாகவும், இது ஆராய்ச்சி துறைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்தோம் என ஒரு சில நாடுகள் சொல்லிகொண்டிருக்கின்றன, அது மிருகங்களில் சோதனை செய்தால் வெற்றிபெறுகின்றன ஆனால் மனிதரிடம் சோதனை செய்தால் முழு வெற்றி கிடைக்கவில்லை, இது சீன, ஜெர்மானிய, அமெரிக்க விஞ்ஞானிகளை தொடர்ந்து இத்தாலிய விஞ்ஞானிகளையும் சோர்வடைய வைக்கின்றது.

இந்தியா இன்னும் தன் ஆய்வின் முடிவினை செய்யவில்லை ஆனால் தீவிரமாக‌ தொடர்கின்றது, சிலவகை நோய்களுக்கு மருந்து கண்டறிய வருட கணக்குகள் ஆகலாம், எந்த மருது என்ன மூலிகை என கண்டறிய நெடுநாள் ஆகலாம். எப்பொருளில் எந்த மருந்து இருக்கும் என்பது நேரம் வந்தால் தவிர தெரியாது,

உதாரணம் ஸ்கர்வி எனப்படும் ஈறுகளை தாக்கும் நோய் ஒன்று உண்டு, ஒருவித ரத்தகசிவினை ஏற்படுத்தி கொல்லும், கப்பலில் செல்வோருக்கு வரும், அது கடும் பாதிப்பினை ஏற்படுத்தியது, அதற்கு இஞ்சி தீர்வு என நெடுங்காலம் கழித்து கண்டறிந்தனர், , மருந்து இஞ்சியில் இருப்பது தெரியாமலே இஞ்சி கப்பல்களில் பலர் ஸ்கர்வியில் செத்தனர்.

நாம் “எம்மாம் பெருய கோயிலுப்பா” என தஞ்சை கோவிலை பார்த்த பொழுது, இங்கு சுற்றிய ஜெர்மானிய கோஷ்டி வித்தியாசமாக சிந்தித்தது, இவ்வளவு பெரிய கற்களை வெட்ட எவ்வளவு வலுவான இரும்பு தளவாடம் வேண்டும்? எப்படி உருக்கியிருக்க வேண்டும்? எப்படி ஏற்றியிருக்க வேண்டும் என சிந்தித்து, இங்கு ஏதோ தொழில்நுட்பம் இருந்திருக்கின்றது என விழுந்து விழுந்து தேடியது.

ஒவ்வொரு ஆலயத்தையும், கல்வெட்டையும், தமிழக ஓலைசுவடிகள் அத்தனையும் படித்தது, பல ஓலைசுவடிகள் ஜெர்மனுக்கே கொண்டு செல்லபட்டன‌, ஆதாரம் வேண்டுமென்றால் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜ சோழனே என நம்காலத்தில் கல்வெட்டை படித்து சொன்னவன் ஜெர்மானியன்.

அப்படி இங்கு தேடினார்கள் , இங்கு தஞ்சை கோவிலை கட்டிய ஆராய்ச்சியின் முடிவில் பல நுட்பங்களை திரட்டி கொண்டு ஜெர்மன் பறந்தார்கள், அதன் பின் இரும்பை உருக்கும் கனரக தொழிலில் ஜெர்மன் நம்பர் 1 நாடானது, இன்றுவரை அவர்களே, இன்னும் இங்கிருந்து விமான குறிப்புகளையும் கடத்தினார்கள் என்கின்றது வரலாறு, ஒரு ஜெர்மானியன் அரைகுறையாக தயாரித்த எந்திரத்தையே பின்னாளில் ரைட் பிரதர்ஸ் கொஞ்சம் மாற்றம் செய்து பறந்தார்கள்.

ஆதிச்ச நல்லூர் நாக்ரீகம், தேரிகாட்டு தாதுமணல் இவற்றை முதன் முதலில் சொன்னவர்கள் ஜெர்மானியர்களே
அப்படிபட்ட ஜெர்மானியர்கள் இங்கிருந்த மருத்துவ முறைகளையும் கொண்டு சென்றார்கள், இது ஐரோப்பா முழுக்க தெரிந்த விஷயம், ஜெர்மானியர் மட்டுமல்ல பிரிட்டானியரும், பிரான்சுக்காரரும் கொண்டு சென்றது ஏராளம். ஆப்ரிக்க அமெரிக்க பழங்குடியினரிடமிருந்து ரப்பர், கோகோ என அவர்கள் களவாடி சென்றது ஏராளம், சீனாவில் இருந்து காகிதம் , வெடிமருந்து என கொண்டு சென்றதும் வரலாறு.

இந்நிலையில்தான் இந்தியா தனது வரலாறை மீண்டும் ஆராய இருக்கிறது இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்துவிட்டார் இது இன்றோ நாளையோ நடக்கும் திட்டமல்ல அடுத்த 20 ஆண்டுகள் நடக்கும் என்று கூறப்படுகிறது அதே நேரத்தில் இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் பல மறைக்கப்பட்ட மருத்துவ முறைகள், அறிவியல் நடைமுறைகள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களை மத்திய தொல்லியல் துறைக்கு கீழ் மாற்ற முடிவு செய்து மத்திய அரசு சார்பில் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தஞ்சை பெரியகோவில் உட்பட பல கோவில்கள் இனி உலகிற்கு வழிகாட்டியாக மாற போவது உறுதி.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*