30 பெண்களுடன் தஞ்சை 27வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் !

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் அமைந்துள்ள ‘இம்மானுவேல் பெந்தகோஸ்தே’ சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ‘ஸ்டேன்லி டென்னி ராபர்ட்’. 27 வயதான இவர், சர்ச்சிற்கு தினமும் வந்து செல்லும் திருமணமாகாத 24 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி அனுபவித்து வந்துள்ளார்.

Loading...

தினமும் மாலை சர்ச்சிற்கு வந்த பெண்ணை நான் இன்னும் மூன்று வருடங்களில் பாதிரியார் தொழிலை விட்டுவிட்டு உன்னை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கைக்கு மாறிவிடுவேன், எனவே நீதான் எனக்கு என்றும் மனைவி என்று பல்வேறு விதமாக பேசி இளம்பெண்ணின் மனதில் ஆசையை விதைத்துள்ளார்.

அவரது ஆசை பேச்சில் மயங்கிய வங்கி ஊழியரான இளம்பெண்ணும் தன்னை முழுவதும் பாதிரியாரை நம்பி இழந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக பாதிரியார் பெண்ணிடம் ஒழுங்காக பேசாமல் அலைகழித்து வந்துள்ளார், இதனால் சந்தேகம் அடைந்த அவர் பாதிரியாரை நோட்டம் இடத்தில் சர்ச்சிற்கு வரும் மற்ற இளம்பெண்கள் முதல் திருமணமானவர்கள் வரை அனைவரிடமும் இதே போன்ற ஆசைவார்த்தையை கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Loading...

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார். மேலும் இதுற்குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பாதிரியார் போர்வையில் பெண்களை ஏமாற்றும் இவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாதிரியாருக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, அவரது செல்போன் கால்களை ஆராய்ந்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள் ! கேரளாவில் 5 பாதிரியார்கள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீளாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியாரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*