வெளியான அதிரடி அறிவிப்பு ! தஞ்சை படைதளம் முழுவதும் நிரப்ப ஆணை !

கடந்த மாதம் தொடங்கிய இந்திய சீனா எல்லை பிரச்சனை தற்போது உயிரிழப்பை சந்திக்கும் அளவிற்கு கைமீறி சென்றுள்ளது, இந்திய வீரர்கள் 20 – ற்கும் மேற்பட்டவர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் சீனாவை சேர்ந்த 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என செய்தி நிறுவனங்கள் PTI, ANI ஆகியவை தெரிவித்துள்ளன.

Loading...

இந்நிலையில் இந்திய இராணுவம் முழுவதும் தயார் நிலையில் இருக்கவும் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் எண்ணிக்கையை அதிக படுத்தவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தஞ்சை விமானப்படைத்தளத்தை முழு வீச்சில் இராணுவ தளவாடங்கள் (விமானம் ) ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடனடியாக பிரமோஸ் ஏவுகணை மற்றும் சுகாய் விமானங்களை படைத்தளத்திற்குள் கொண்டு செல்ல விமான படை திட்டமிட்டு உள்ளதாகவும் இதன் மூலம் சீனாவின் பகுதிகளை துல்லியமாக தாக்கலாம் எனவும் கணக்கிட்டுள்ளது.

யுத்தம் என்று வரும் போது படை பலம் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கையை வைத்து வெற்றி அமைவதை காட்டிலும், வகுக்கும் வியூகங்களே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என சீனா தரப்பில் அச்சம் கொள்வதாகவும் பல உலக நாடுகள் இந்தியாவின் பின்னால் அணிதிரள அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

கூடுதல் தகவல் :இந்திய சீனா எல்லையில் நடப்பது என்ன :-
லடாக்கில் இந்திய- சீன எல்லை பகுதியில் பதற்றம். இரு தரப்பிலும் கற்களாலும், கம்புகளாலும் தாக்கிக் கொண்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டு மேலும் பதற்றம் கூடி இருக்கிறது.

எல்லை பகுதில் நடக்கும் பிரச்சினை தான் என்ன ?லடாக்கில் இந்திய- சீன எல்லை பகுதியில் உள்ள Galwan ஆறும், அதனை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதியும்… சீனாவின் Zinjiang- திபெத் இடையிலான தொடர்பு பாதையை தடுக்கக்கூடிய அளவில் முக்கியத்துவம் பெற்றது என்பதால் ….இப் பகுதி குறித்த ஒரு பதற்றமும் , அதனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்கிற எல்லை தாண்டிய அத்துமீறிய ஆக்கிரமிப்பு ஆசையும் சீனாவிற்கு எப்போதும் உண்டு.

இரண்டாவது முக்கிய கேந்திரம் அக்சய் சின் பகுதி !
இப் பகுதியும் சீனாவிற்கு உரிமையுள்ள பகுதி அல்ல என்றாலும்..அதனை அத்துமீறி தான் ஆக்கிரமித்திருக்கிறது சீனா.

1956 ஒப்பந்தத்தின் படி… Galwan ஆறு, அதனையொட்டிய Galwan பள்ளத்தாக்கு பகுதிகள் எல்லாம் சீனாவிற்கு சொந்தமானவை அல்ல. ஆனால்….4 வருடங்களுக்குள் …கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி நகர்ந்து…ஆற்றை ஒட்டிய குறுகிய பாதையை கொண்ட உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்திய படைகள் …இவ்வாற்றுப் பகுதியின் வாயிலாக அக்சய் சின் பகுதியை அடைவதை தடுக்க இயலும்.
அந்த வகையில் ….இந்திய எதிர்ப்பையும் மீறி 1960 -ல் அங்குள்ள மற்றுமொரு ஆறான Shyok உட்பட ஆக்கிரமித்த எல்லை பகுதிகளை.. 1962-ல் இந்திய-சீன போருக்கு பின்….1956 ஒப்பந்தத்தை மீறி….தன்னுடைய பகுதியாக சொல்லிக் கொண்டது சீனா.

இதன் படி….1962 போருக்கு பிறகு…. சீனா ஆக்கிரமித்த பகுதிகளை உள்ளடக்கிய 1960 வரைபடம் தான் பின்பற்றப்படுகிறது.இந்த பின்புலத்தில் தான்…60 வருடங்களுக்கு பிறகு….சீனா …தனக்கு உரிமையில்லாத Galwan ஆறு பள்ளத்தாக்கு பகுதியில் சாலை அமைக்கும் பணியை 2016-ல் தீவிரப்படுத்திய போது ..இந்தியா நியாயமாக அதனை ஆட்சேபிக்கிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பு…இந்திய எல்லையை நோக்கி நெருங்கி வருவதையும், அதன் பேராபத்தையும் உணர்ந்த மத்திய அரசு…
இந்தியாவிற்கு உரிமையுள்ள எல்லை பகுதியில் … சாலைகளை அமைக்கும் பணியை தீவிரப்படுத்துகிறது.
கேட்பாரற்ற முறையில் நிகழ்ந்துகொண்டிருந்த சீனாவின் அத்துமீறிய அராஜகமான ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு …தடை ஏற்படுத்திய இந்தியாவின் இந்த நடவடிக்கை .. ஆசிய ரௌடியான சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் விளைவு தான் ..நேபாளை பின்னிருந்து தூண்டிவிடுவது, பாகிஸ்தானை இயக்குவது, பூடானை சோதித்து பார்ப்பது என்று பல வகைகளில் வெளிப்பட்டது.
ஆசிய வல்லரசாக தன்னை கருதிக் கொண்டு ..எந்தவித நியாயமும் இன்றி சீனா நிகழ்த்தி வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், அத்துமீறல்கள், அராஜகங்கள் ….அனைத்தும் உலக நாடுகளின் கவனத்திற்கும் வெளிப்பட்டிருப்பதால்..
உலக அரங்கில்…சீனாவின் மீதான கண்டனங்களும், இந்தியாவிற்கான ஆதரவும் வலுத்திருக்கின்றன.

வைரஸ் பேரிடரில்…தன் மீது ஏற்பட்டிருக்கும் கடுமையான எதிர்ப்பை …இந்தியாவுடனான போர் சூழலை உருவாக்குவதன் மூலம் திசை திருப்பவும் முயற்சிக்கிறது சீனா.
இன்றைய நிலையில்…போரை உலக நாடுகள் எதுவும் விரும்பவில்லை. அதனால்..சீனா வலிந்து திணிக்கப் பார்க்கும் போர் சூழலுக்கு … இந்தியா தான் பதிலடி கொடுக்கும் என்பதில்லை. சம்பந்தமில்லாத ஒரு நாடு கூட பதிலடி கொடுக்கலாம். கொடுக்கக்கூடும். Butterfly effect.

பூகோள அரசியலின் வலிமை & தாக்கம்..அத்தகைது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*