சுதா கொங்காரா வெளியே, லோகேஷ் உள்ளே: ‘தளபதி 65’ சர்ப்ரைஸ் தகவல்

சுதா கொங்காரா வெளியே, லோகேஷ் உள்ளே: ‘தளபதி 65’ சர்ப்ரைஸ் தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் நிலையில் ’தளபதி 65’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருப்பதால் தளபதி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்

இந்த நிலையில் ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா தான் இயக்குவார் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது திடீரென சுதா கொங்கரா இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. சுதா கொங்கராபோட்ட ஒரு சில நிபந்தனைகளுக்கு விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இந்த பிராஜக்ட் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம்தான் ’தளபதி 65’ படம் என்றும் இந்த படத்தை ட்ரீம் வாரியஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *