Connect with us

சர்ச்சைகள்

வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்ட இயக்குனர் – தலைவி பிரச்சனையில் சமாதானம் !

இயக்குனர் விஜய் மற்றும் தலைவி படத்தின் எழுத்தாளர் அஜயன் பாலா அகியோருக்கு இடையிலான பிரச்சனை சமாதானத்திற்கு வந்துள்ளது.

எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனர்  ஏ எல் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வரிசையில் விஜய் இப்போது கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து இயக்கி வரும் ’தலைவி’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று  படத்திலும் கதை மற்றும் திரைக்கதையை பிரிவுகளில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது பெயரையே படத்திலிருந்து நீக்கி விட்டதாக அவர் புகார் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார்.

அதில் “சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

Loading...

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

Loading...

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல, இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க மாட்டர்கள் . நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”, என தெரிவித்திருந்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ ஆரம்பிக்க அதை உடனடியாக நீக்கினார்.

இதன் பின்னர் மாலை ‘இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை, சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த பிரச்சனையின் அடுத்த கட்டமாக சற்று முன்னர் ‘நேற்று இரவு நண்பரும் இயக்குனருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குனரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தை காண்பித்தார். இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணு வுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப்ரச்னைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.’ என்று தெரிவித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending