Connect with us

#24 Exclusive

மனித வெடிகுண்டு, கன்னியாகுமரியில் STP படை குவிப்பு ! என்ன நடக்கிறது? ( வீடியோ இணைப்பு )

Published

on

சமூகவலைத்தளம் :- காவலர் SI வில்சன் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருந்ததும், மனித வெடிகுண்டாக மாறி குடியரசு தினவிழாவின் போது தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும், காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் 8 ம் தேதி இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படு கொலை செய்யபட்டார், கேரளாவில் பிடிபட்ட தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்துல் ஹமீது தவுபிக் இருவரும் வில்சனை கொலை செய்தது தெரியவந்துள்ளது, மேலும் இன்று அவர்கள் விசாரணையில் தெரிவித்த வாக்குமூலம்  பின்வருமாறு :- 

Loading...

எங்களது ஹல் ஹமீது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்தனர். அதனால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்டவே களியக்காவிளையில் சோதனை சாவடியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம் அதன் பிறகு கை கால்களில் வெட்டி சதையை எடுத்தோம் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Loading...


குமரி சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையில் மொத்தம் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சி பெற்றவர்கள் என்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இவர்கள் கர்நாடகா, டெல்லியில் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து இருக்கிறது. உடுப்பியில் இருந்து தமிழக கியூ பிரிவு போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தியதின் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரியவந்தது.

கர்நாடகாவில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மும்பையில் வைத்து இவர்களது கையில் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதைவிட இவர்கள் இருவரும் மோடி தமிழகம் வரும்போது #gobackmodi என ட்விட்டரில் பதிவு செய்து உன்னை ஒரு நாள் வீழ்த்துவோம் என்று பதிவு செய்துள்ளனர், அந்த பதிவை பலர் லைக் செய்திருப்பதும் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவும் காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் தீவிரவாதிகள் தக்கலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படுவதாலும் வேறு ஏதேனும் சில தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்பதால் தமிழக காவல்துறையில் சிறப்பு வாய்ந்த இந்திய அளவில் முன்னணியில் உள்ள SPT எனப்படும் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் குவிக்கப்பட்டுள்ளது, மேலும் இன்று தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் அனைவரையும் தேடுதல் வேட்டையில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.

சமூகவலைத்தளத்தில் இந்து மதத்திற்கு எதிராகவும், பாஜக தலைவர்களுக்கு எதிராக கருத்து பதிவு செய்து வருபவர்களை இவர்கள் தேடிப்பிடித்து ஹல் ஹமீது எனும் புது தீவிரவாத கிளையை உருவாக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன, கருத்து மோதல்கள் இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி அக்கம் பக்கத்தில் பழகியவர்களையே கொலை செய்ய துணிந்த சம்பவம் தற்போது கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending