தாய் மொழியில் பெயர் வைத்தால் அரசு வேலையில் சலுகை, இனி மொழி அரசியல் செய்ய முடியாது மோடியின் அடுத்த சரவெடி !!!

தாய் மொழியில் பெயர் வைத்தால் அரசு வேலையில் சலுகை,  இனி மொழி அரசியல் செய்ய முடியாது மோடியின் அடுத்த சரவெடி !!!

மத்திய அரசு சரியாக டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னர் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக மாநிலங்களவைக்கு வரவேண்டும் என கொறடா உத்தரவு போடப்பட்டது, இதனையடுத்து பொது சிவில் சட்டமா? அல்லது மதம்மாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வர போகிறதா மத்திய அரசு என எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் அதன் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்நிலையில் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில எதிர் கட்சிகளும் குறிப்பாக பிராந்திய கட்சிகளும் பாஜக இந்தியை திணிக்க பார்க்கிறது தமிழகத்தை பொறுத்த வரை தமிழை அழிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு தங்களது ஒரே செயலில் பாஜக எதிர்கட்சிகளையும் அவர்களது விமர்சனங்களையும் தூள் தூளாக உடைக்க உள்ளது, மாநில மொழிகள் அதாவது தமிழகத்தை பொறுத்தவரை தமிழில் பெயர் வைத்தால் அவர்களுக்கு அரசு வேலை மற்றும் அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாம்.

Loading...

இதன் மூலம் இந்து முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என யார் தமிழில் பெயர் வைத்தாலும் அவர்களுக்கு சலுகை கிடைக்கும், அதே நேரத்தில் பாஜகவின் இந்த திட்டத்தை திமுக, உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்தால் தமிழ் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் மேலும் இதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான சட்டம் என்று போராட்டம் தொடர்ந்தால்..

Loading...

சொந்த மாநில மக்களால் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு கணக்கிட்டுள்ளது, இதற்காகத்தான் அன்று நாடாளுமன்றத்தில் பாஜக எம் பி களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதன் பிறகு டெல்லி தேர்தல் நேரத்தில் இப்போது தேவையில்லை எனவும் மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இச்சட்டம் நிறைவேறும் அன்று திமுக, நாம் தமிழர் போன்ற மொழி அரசியல் பேசும் கட்சிகள் கூட எதிர்க்க முடியாமல் அமைதியாகும் என்பதுதான் இப்போதைய கணிப்பாக உள்ளது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *