Connect with us

#24 Exclusive

கிழித்து தொங்கவிட்ட சுப்ரமணியசாமி வாயை மூடிக்கொண்டு இருந்த திமுக காங்கிரஸ் எம் பி கள் !

Published

on

மாநிலங்களவையில் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு சட்டதில் திருத்தம் கொண்டுவந்த மசோதாவின் மீதான விவாதம் நடைபெற்றபோது பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியசாமி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சுப்ரமணியசாமி மாநிலங்களவையில் பேசிய கருத்துக்கள் பின்வற்றுமாறு :-

SPG பாதுகாப்பு என்பதனை பிரதமர் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதனை கருத்தில் கொண்டு, இந்த மசோதாவைக் கொண்டு வந்ததற்காக உள்துறை அமைச்சருக்கு நன்றி.
பிரதமர் தவிர வேறு ஒருவருக்குமே இந்த பாதுகாப்பு வசதி இதுவரை கிடையாது. இதிலும் விதிவிலக்கு ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஏன் இருந்து வந்தது. அதற்கு காங்கிரஸ் கொடுத்த விளக்கம்.. அவர்கள் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர் என்பது.

Loading...

ஆனால் அவர்கள் இறந்ததற்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திரா காந்தியை பொருத்தவரை உளவுத்துறை ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. பிரதமரின் பாதுகாப்பு நபர்கள் இருவரைக் குறிப்பிட்டு அவர்கள் சரியில்லை. வெளியேற்ற வேண்டும் என்று எச்சரித்திருந்தனர். இந்திரா காந்தியோ அவர்களின் குடும்பத்தவர்களோ அந்த எச்சரிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

Loading...

ஆனால் அதே நபர்கள்தான் இந்திரா காந்தியின் இல்லத்திலேயே அவரைக் கொலை செய்தார்கள். ராஜீவ் காந்தியின் இறப்பைப் பொருத்தவரை ஜஸ்டிஸ் வர்மா கமிஷன் ரிப்போர்டின்படி, அந்த நிகழ்ச்சியை நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸுக்கு எந்த ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை. SPG பாதுகாப்பை வி.பி.சிங் எடுத்ததால் மட்டுமே இந்த கொலை நடந்ததாக எங்குமே வர்மா கமிஷனில் குறிப்பிடவில்லை. இப்போது காங்கிரஸ் இதனை சாக்காக வைத்து சோனியா குடும்பத்திற்கு SPG பாதுகாப்பு வேண்டும் என்று கூறுவது அபத்தமாக இருக்கிறது.

முதலில் இந்த பாதுகாப்பை சோனியா குடும்பத்திற்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் வழங்கியதற்குக் காரணம் அவர்களுக்கு LTTE மூலம் அச்சுருத்தல் இருந்தது என்பதற்காகவே. ஏனெனில் ராஜீவின் கொலைக்கு காரணம் LTTE க்களுடன் இணைந்து அந்த கொலையை செயல்படுத்தியது திமுகவே. திமுக ஆட்சியில் பங்கு கொண்டிருக்கிறது. அதனால் என் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்கிறோம் என்று சம்பந்தமில்லாமல்… I K குஜரால் அரசைக் கலைத்தவர் சோனியா காந்தி. இதுவும் ஆவணத்தில் இருக்கிறது. அனைவரும் அறிந்த உண்மை.

அதன் பிறகு அதே திமுகவுடன் சேர்ந்து கொண்டு சோனியா காந்தி கூட்டணி அமைத்தார். வழக்கில் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டுமென்று சோனியாகாந்தி ஜனாதிபதிக்கு தெரிவித்தார். இதுவும் இப்போதும் ஆவணத்தில் உள்ளது. அதற்கும் ஒருபடி மேலே போய்.. பிரியங்கா காந்தி கொலைக்கு உடந்தையான நளினியை தனிப்பட்ட முறையில் வேலூர் சிறையில் சென்று சந்தித்தார். கைதிகளை குடும்ப நபர்களைத் தவிர வேறு ஒருவரும் பார்க்கக் கூடாது என்னும் சட்டத்தை மீறி இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆகவே இவர்களுக்கு LTTE அச்சுருத்தல் இல்லை.

இப்போது என்ன அச்சுருத்தல் இவர்கள் குடும்பத்திற்கு இருக்கிறது..?
இஸ்லாமியர்களால் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி என்பதே மதச்சார்பின்மைக்கு ஆதரவு அளிக்கும் கட்சி. ஆகவே எங்களுக்குதான் இஸ்லாமியர்களால் அச்சுருத்தல் இருக்கிறது.

ஆகவே முதலில் சட்டப்படி இந்த பாதுகாப்பை எடுத்தது மிகவும் சரியே. அவர்களுக்கென்று தனியான அரசியலமைப்பெல்லாம் இனிமேல் கிடையாது. சட்டத்தின்முன் அனைவரும் சமமே. இரண்டாவதாக அவர்கள் குடும்பம் நீண்ட காலம் உயிரோடு இருக்க வேண்டும். ஏனெனில்.. அப்போதுதான் நாங்கள் அவர்களை ஊழல் வழக்கிற்காக ஜெயிலில் தள்ளி அழகு பார்க்க முடியும்.!

இவ்வாறு சுப்ரமணிய சாமி வெளுத்து வாங்க SPG சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம் பி கள் வாய் மூடி பெரிய அளவில் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தவில்லை அப்படி வெளிப்படுத்தியிருந்தால் திமுக விடுதலை புலிகளுக்கு ஆதரவான இயக்கமா இல்லையா என நேரடியாக சுப்ரமணியசாமி கேள்வி எழுப்பியிருப்பாரோ?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552