மீண்டும் டாஸ்மார்க் நேரத்தை மாற்றி அமைத்த தமிழக அரசு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் exit. ஒருவருக்கு எத்தனை பீர் கிடைக்கும்? 

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வுள்ள நிலையில் மதுபானங்களின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் காலையில்  வெளியாகின. தமிழகத்தில் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆங்காங்கே கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

Loading...

மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளும் தொடங்கியுள்ளன. மேலும் சில இடங்களிலோ சரக்கு கிடைக்காத மன உளைச்சலில் வார்னிஷ், ஷேவிங் லோஷன் ஆகியவற்றைக் குடித்து மது அடிமைகள் இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேலும் அரசிற்கு வரவேண்டிய நிதி வருவாயும் குறைந்துள்ளது, இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு டாஸ்மாக்கை திறக்க உள்ளது.

இந்நிலையில் ஏறக்குறைய  40 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் திறக்க இருப்பதால் மிக பெரிய அளவில் கூட்டம் கூடலாம் எனவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது, இதனையடுத்து தற்போது தமிழக அரசு ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில்  வயது அட்டவணை ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

Loading...

அதன்படி 50-வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மது வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  40-50 வயதிற்குள் இருப்பவர்களுக்கு 1 மணி முதல் 3 மணி வரையிலும் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மதுவாங்க வருபவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் டோக்கன் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  மது கிடைக்காது எனவும் ஸ்டாக் தீர்ந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனராம். மேலும் ஒருவருக்கு இரண்டு பீர் அல்லது 360 ml ஆப் மட்டுமே கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*