டாஸ்மாக் விற்பனை… அதிர்ச்சியில் தமிழக அரசு – இதுதான் காரணமா?

டாஸ்மாக் விற்பனை… அதிர்ச்சியில் தமிழக அரசு – இதுதான் காரணமா?

Loading...

தமிழகத்தில் டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை குறைந்துள்ளதால் வருவாய் குறையும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் 40 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த நிலையில் தமிழக அரசு மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதற்குப் பலமாக எதிர்ப்பு எழுந்தாலும் அரசு பின் வாங்கவில்லை.

Loading...

இதையடுத்து மே 7 டாஸ்மாக் கடையை திறந்து தமிழக அரசு 172 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்கே சென்னையில் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாளில் டாஸ்மாக் வருமானம் 122 கோடியை எட்டியது. இதன் மூலம் இரு நாட்களில் 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதால் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக மேல் முறையீடு செய்து, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்து மீண்டும் நேற்று டாஸ்மாக் கடைகளை திறந்தது. கடைகளில் கூட்டம் அதிகமாவதைத் தடுக்கும் பொருட்டு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 நபர்களுக்குதான் சரக்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 163 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நேற்று 133 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

ஆனால் அதன் பின்னர் மது விற்பனை பெருமளவில் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கடைகளில் கூட்டம் குறைந்து மக்கள் தாராளமாக நின்று பல இடங்களில் சரக்குகளை வாங்கி செல்கின்றனர். இதற்குக் காரணம் மக்கள் கைகளில் காசு புழங்காததே என சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக எந்த வேலைகளும் இல்லாததால் அவர்களிடம் இருந்த பணத்தை வைத்து முதல் இரண்டு தினங்கள் சரக்கு வாங்கி குடித்துள்ளனர் என சொல்லபடுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*