டாஸ்மாக்குக்குள் புகுந்து திருடும் ‘குடி’மகன்கள் – நிர்வாகம் அதிரடி முடிவு !

டாஸ்மாக்குக்குள் புகுந்து திருடும் ‘குடி’மகன்கள் – நிர்வாகம் அதிரடி முடிவு !

Loading...

தமிழகத்தில் சரக்குக்காக டாஸ்மாக்குக்குள் புகுந்து சரக்குகளை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவதை அடுத்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே புக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் மதுபாட்டில்கள் திருடப்பட்டும் உள்ளன.

Loading...

இது சம்மந்தமாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மேலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மதுபானங்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட மேலாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர்.

இதன்படி, தொலைதூர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுபானங்கள் வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும். மதுக்கடைகளில் இருந்து மதுபானங்கள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஒருவேளை குடோன்களில் போதுமான அளவுக்கு மதுபானங்களை வைக்க இடவசதி இல்லை என்றால் மாவட்ட மேலாளர்களால் அடையாளம் காணப்படும், மதுக்கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, தங்களுடைய தாலுகாக்களில் உள்ள பண்டகசாலைகள், குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக வைக்க வேண்டும்.

இதற்கான வாடகை கட்டணம் குறைவாக இருப்பதையும், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதையும் மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மதுக்கடைகளில் இருந்து குடோன்கள், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் இருப்பு வைத்தால் அங்கு தீ தடுப்பான்கள் பொருத்துவதோடு, கண்காணிப்பு கேமரா பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்களை சுழற்சி முறையில் நிர்ணயித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளை தவிர போலீஸ் பாதுகாப்பும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர்களிடம் இருந்து கேட்டு பெற வேண்டும்.

திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கடைகளில் இருந்து மதுபானங்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்போகும் செயல் திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும். போதுமான அளவு போலீஸ் பாதுகாப்போடு மதுபானங்களை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். எந்தெந்த கடைகளில் இருந்து மதுபானங்கள் எந்த இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட மேலாளர்கள் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்” – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*