சிவனை வணங்கி தமிழ் முறைபடி திருமணம் செய்த சதாம் ஹுசைன் ! இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு !! ஊடகங்கள் கண்டுகொள்ளுமா?

வழக்கமாக முகநூலில் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் அல்லது மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களை வாழ்த்தும் முற்போக்குவாதிகள், இஸ்லாமிய அமைப்புகள் நேற்று நடைபெற்ற திருமணத்தை பார்த்து கதறி கொண்டு இருக்கின்றனர்.

Loading...

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாதம் உசைன் என்பவர், துர்கா தேவியை காதலித்து வந்துள்ளார், இருவரது காதலுக்கும் அவர்கள் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர், மேலும் யாரும் மதம் மாற வேண்டாம் எனவும் தமிழ் முறைப்படி சிவனை வணங்கி திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்த இரு குடும்பத்தினரும் புரட்சி திருமணம் செய்துள்ளனர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த சதாம் இந்து மதத்தை சேர்ந்த துர்கா தேவியை சிவனை வணங்கி, முருகன் மீது சத்தியம் செய்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர் என்ற முறையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து இனி தமிழ் முறைப்படி இல்லற வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து உண்மையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Loading...

வழக்கமாக தமிழன் என்று குரல் கொடுக்கும் சிலர் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறவில்லை மாறாக முகநூலில் மணமகனை திட்டி வருகின்றனர் ஒரு இஸ்லாமியனாக பிறந்துவிட்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்வது தவறு எனவும் அவரை ஒரு சிலர் மிரட்டியும் வருகின்றனர்.

வழக்கமாக முகநூலில் மாற்று மதிப்பெண்கள் இஸ்லாமிய இளைஞனை காதல் திருமணம் செய்து கொண்டால் Love ரியாக்ஷன் கொடுக்கும் இஸ்லாமியர்கள் angry ரியாக்ட் செய்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி நமக்கு வந்தால் ரத்தமோ? என சிலர் கேள்வியும் எழுப்புகின்றனர்.

எனினும் தமிழ் முறைப்படி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன ! இந்த புரட்சி திருமணம் குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2636 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*