Connect with us

#24 Exclusive

தமிழ்நாட்டில் CAA விற்கு ஆதரவாக வீதிக்கு வந்த இந்துக்கள் தெறிக்கவிட்ட சிறுவன் எவ்வளவு கூட்டம் மிரண்டு போன திமுகவினர் வீடியோ இணைப்பு !

Published

on

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல அமைப்புகள் குறிப்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், இன்னும் பல முஸ்லீம் இயக்கங்கள் ஒன்று சேர்த்து சென்னையில் கடந்த 23- ம் தேதி சென்னையில் கண்டன போராட்டம் நடத்தினர், கூட்டத்தில் பங்கேற்ற ஆதரவாளர்களை காட்டிலும் கவகத்துறையினர் அதிகமாக இருந்ததாகவும், பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் இந்த போராட்டத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது.

எங்கிருந்தோ வெளிநாட்டில் உள்ள அதுவும் தங்கள் நாடுகளை இஸ்லாமிய நாடு என அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால், நாட்டு மக்கள் நலன் கருதி நாங்களும் ஆதரவாக களத்தில் இறங்குவோம் என்று இந்து முன்னணி அறிவித்தது, இந்நிலையில் இன்று தனிப்பெரும் இயக்கமாக இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக குடும்பம் குடும்பமாக தமிழர்கள் கலந்து கொண்டனர்.

Loading...

ஆனால் சென்னையில் இஸ்லாமியர்கள் CAA எதிராக நடத்திய போராட்டதினை நேரலை செய்த எந்த ஊடகமும் திருப்பூரில் இந்துக்கள் ஆதரவாக போராடிய நிகழ்வினை துளியளவு கூட வெளியில் சொல்லவில்லை ஆனால் அதைஎல்லாம் மீறி சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது, கூட்டத்தில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக பலகையை பிடித்து கொண்டு என் நாட்டில் எங்கள் ஆட்சியே நடக்கும், எங்கள் கண்முன்னே எங்கள் நாடு கலாச்சாரத்தை இழப்பதை வேடிக்கை பார்க்க இது ஒன்றும் இத்தாலி ஆட்சியல்ல இந்தியர் மோடியின் ஆட்சி என குழந்தை மொழியில் பேச பலரும் கைதட்டி உற்சாக படுத்தினர். (வீடியோ கீழே )

Loading...

தற்போது குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவாக கூடிய கூட்டத்தால் உள்ளாட்சி தேர்தலில் கடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலை போன்று மக்கள் நம்மை இந்து விரோத கட்சி அல்லது இந்தியாவிற்கு எதிரான கட்சி என எண்ணிவிடுவார்களோ என அச்சத்தில் உள்ளனராம். ஆமாம் ஏன் நடுநிலை ஊடகங்கள் இந்த செய்தியை சொல்லவில்லை?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552