Connect with us

#24 Exclusive

தமிழகத்தில் உருவானது காவி படை ! சிறை சாலையில் கெத்து காட்டிய பாஜகவினர்

Published

on

தமிழகத்தில் உருவானது காவி படை ! சிறை சாலையில் கெத்து காட்டிய பாஜகவினர்

கோவை.,

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜெய முருகன் என்ற இந்து அமைப்பை சேர்ந்த இளைஞர் இஸ்லாமியர் ஒருவர் இந்து தெய்வமான அத்திவரதர் குறித்து பேசியதற்கு பதிலடியாக அவரது பாணியில் வீடியோ மூலம் பதிலடி கொடுத்திருந்தார்.

Loading...

இந்த நிலையில் சில இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்ததை தொடர்ந்து ஜெயமுருகன் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார், அப்போது சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்களை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்தனர்.

Loading...

வினைக்கு காரணமான இஸ்லாமியரை விட்டு விட்டு பதிலடி கொடுத்த இந்து மதத்தை சேர்ந்தவரை கைது செய்வதா என்ற ரீதியில் பதிலடி கொடுத்தனர்.

ஆனால் இன்று 10 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜெயமுருகன் வெளிவந்துள்ளார், இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் ஒருவர் சிறை சென்றால் அவரை மீட்க நெருங்கிய நபர்கள் மட்டுமே செல்வர் ஆனால் இந்த முறையோ இந்து அமைப்பை சேர்ந்த கோவை பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஜெயமுருகனை வரவேற்றுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் இனி இந்து மதத்திற்காக சிறை செல்பவர்களை மீட்கவோ, உதவவோ வட மாநிலங்களை போன்று அமைப்புகள் உருவாகிவிட்டதாக பெரியாரிஸ்ட்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இனி பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக தானாக கூட்டம் கூடும் என்றும், இந்துக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending