Connect with us

#24 Exclusive

இன்று இரவு வெளியே போக வேண்டாம்: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபலம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று விடிய விடிய மழை பெய்யும் என்பதால் சென்னைவாசிகள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது
மழை குறித்த விவரங்களை அவ்வப்போது தனது பேஸ்புக்கில் தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் இன்று பதிவு செய்துள்ள ஒரு பதிவில் ’சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும் என்றும் இதனால் மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அதுமட்டுமின்றி நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கன மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Loading...

எனவே நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் இதனை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

Loading...

Trending