Connect with us

சமுகவலைத்தளம்

தமிழகத்தில்தான் 6 பீர் வெறும் 60 ரூபாய்தான் மிச்சம்வைத்தால் அபராதம் என்ன தெரியுமா?

சமூகவலைத்தளம்.,

நாளுக்கு நாள் தொழிலை பிரபலப்படுத்த ஒவ்வொருவரும் புது விதமான யோசனைகளை முன்னெடுத்து வருகின்றனர் அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மேடவாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் பார் ஒன்று புதுவிதமான யுத்தியை கையாண்டு தனது மார்கெட்டிங்கை பிரபலப்படுத்தி வருகிறது.

ஆம் அது வேறொன்றுமில்லை 6 குளிர்ச்சியான பீர் மற்றும் இதர நொறுக்கு தீனிகள் பழங்கள் உள்ளிட்டவையை வெறும் 60 ரூபாய்க்கு கொடுக்கிறது ! போட்டியில் கலந்து கொள்ளும் நபர் 2000 ரூபாய் முன்பணத்தினை செலுத்தி போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். 6 பீரை 3 மணி நேரத்தில் குடித்து விட்டு குறிப்பாக வாந்தி எடுக்காமல் செல்லவேண்டும் அப்படி சென்றால் அவர் செலுத்திய முன்பணம் 2000 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ரூபாய் போக மீதி பணம் 1940 ரூபாய் அவரிடம் கொடுக்கப்படும்.

Loading...

அத்துடன் அவர் குடித்த பீர் மற்றும் சைடு டிஷ் ஆகியவற்றிற்கு ஆன செலவை பார் நிர்வாகமே ஏற்று கொள்கிறது, இதுதான் இந்த போட்டியின் முழு நிலவரம் குறிப்பாக போட்டிக்கு 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் இந்த போட்டிகளை சனி மற்றும் ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே நடத்துகிறது பார் நிர்வாகம்.

Loading...

Related videos :-

இதில் ஏராளமான மதுபிரியர்கள் கலந்து கொண்டு பலர் தோல்வியை தழுவி வருகின்றனர், இருப்பினும் சிலர் ஆச்சர்ய படும்படியாக வெற்றியையும் பெற்று வருகின்றனர். மதுவை ஒழிக்க வேண்டும் என்று பெண்கள், அரசியல் அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது போன்ற போட்டிகள் இளைஞர்களை மேலும் குடிக்கு அடிமையாக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending