Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா நோயாளி குணமடைந்தர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா நோயாளி குணமடைந்தர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் முழுமையாகக் குணமாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

தமிழகத்தில் நேற்றுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் பலியாகி இருந்தார். இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இரண்டாவதாக ஒரு நோயாளி முழுவதும் குணமாகியுள்ளார். இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டரில் ‘தமிழ்நாட்டில் இரண்டாவதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வருகிறார். இரண்டு சோதனைகளுக்குப் பிறகு அவர் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending