VIP- களுக்கு பெண்களை சப்ளை செய்த பெண் அரசியவாதி சிக்கினார் காவல்துறை அதிரடி நடவடிக்கை !

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் அரங்கேறிவருவதாக தமிழக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், அதில் வெளிமாநிலத்தை சேர்ந்த 18 வயதிற்கும் குறைவான இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் புரோக்கராக செயல்பட்ட பிரேமா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Loading...

இது தொடர்பாக விசாரணை நடத்தியப்போது அதே பகுதியை சேர்ந்தவரும், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ள பிரேமா என்பவர் தான், இளம்பெண்களை அழைத்து வந்து தொழில் செய்கிறார் என்பது தெரிவந்தது. இவர் உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இதனையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பிரேமாவை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்மேலும், அவரிடமிருந்து பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை மீட்டுத் திருப்பத்தூர் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரேமா நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

Loading...

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

மேலும் பல்வேறு பிரிவுகளில் கீழ் பிரேமா மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் யாருக்கெல்லாம் பெண்களை சப்ளை செய்தார், இதில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர், கட்சிகள் பேதமின்றி பலரும் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொழில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3882 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*