தற்போதுவரை திமுக அதிமுக தவிர மற்ற கட்சிகள் வென்ற இடங்களின் முழு விவரம் .

தற்போதுவரை திமுக அதிமுக தவிர மற்ற கட்சிகள் வென்ற இடங்களின் முழு விவரம் .

தமிழக ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது இப்போதுவரை 40 சதவீத வாக்குகளே என்னப்பட்டுள்ளதால் நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

இந்நிலையில் தொடர்ந்து வெளியாகும் முடிவுகளின் படி அதிமுக திமுக தவிர மற்ற கட்சிகள் பெற்ற இடங்களின் பட்டியல் தற்போதைய நிலவரப்படை அதிமுக திமுக அடுத்து மூன்றாவது இடத்தில் பாமக உள்ளது பாமக மாவட்ட கவுன்சிலரில் 9 இடங்களிலும் யூனியன் கவுன்சிலரில் 70 இடங்களிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது .

நான்காம் இடத்தில் இருப்பது காங்கிரஸ் , காங்கிரஸ் சார்பில் 8 மாவட்ட கவுன்சிலர்களும் 41 யூனியன் கவுன்சிலர்களும் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் . ஐந்தாம் இடத்தில் பாஜக உள்ளது பாஜக சார்பில் 5 மாவட்ட கவுன்சிலர்களும் 35 யூனியன் கவுன்சிலர்களும் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர்

Loading...

ஆறாம் இடத்தில் அமமுக இதன் சார்பில் 3 மாவட்ட கவுன்சிலர்களும் 48 யூனியன் கவுன்சிலர்களும் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர . ஏழாம் இடத்தில் தேமுதிக இதன் சார்பில் 3 மாவட்ட கவுன்சிலர்களும் , 30 யூனியன் கவுன்சிலர்களும் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் .

Loading...

எட்டாம் இடத்தில் இருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதன் சார்பில் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் 3 யூனியன் கவுன்சிலர்கள் 25 பெரும் முன்னணியில் உள்ளனர் . ஒன்பதாவது இடத்தில் மதிமுக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்திலும் 7 யூனியன் கவுன்சிலர் இடத்திலும் முன்னணியில் உள்ளது .

பத்தாவது இடத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது இந்த கட்சி சார்பில் போட்டியிட்ட யூனியன் கவுன்சிலர்களில் 7 பேர் மட்டும் முன்னணியில் உள்ளனர் . பதினொன்றாவது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இந்த சார்பில் போட்டியிட்ட 5 யூனியன் கவுன்சிலர்கள் மட்டும் முன்னணியில் உள்ளனர் .

பன்னிரண்டாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு யூனியன் கவுன்சிலர் முன்னணியில் உள்ளார் இது தவிர சுயர்சை வேற்பாளர்கள் 1 மாவட்டம் மற்றும் 178 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் முன்னணியில் உள்ளனர்

Loading...

Tnnews24 Digital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *