வழிபாட்டு தலங்களைத் திறக்க நீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசின் பதில் என்ன தெரியுமா?

வழிபாட்டு தலங்களைத் திறக்க நீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசின் பதில் என்ன தெரியுமா?

Loading...

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.  கோவில் மட்டும் இல்லாமல் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமிய மக்கள் வீட்டில் இருந்தபடியே இஃப்தார் நோன்பு இருந்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் மசூதிகள் மற்ற்ம் கோயில்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மசூதிகளை ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களாவது திறக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பின. அதுபோல இந்து சமய அறநிலையத்துறையும், ஒரு நாளைக்கு ஒரு கோயிலுக்கு 500 பாஸ்கள் வீதம் அளித்து கோயில்களை திறக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களையும் திறக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீதான விசாரணையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதில் “தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்” என விளக்கம் அளித்துள்ளது. இதனால் இப்போதைக்கு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படமாட்டாது என்பது உறுதி.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*