Connect with us

#24 Exclusive

தொடரும் பலாத்கார சம்பவங்கள் தமிழக அரசு அதிரடி உத்தரவு !

சிறுவயது குழந்தைகள் முதல் அனைத்து வயதுடைய பெண்கள் மீதும் பாலியல் ரீதியாக நடைபெறும் வக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை உருவாகியுள்ளது, தினமும் செய்தித்தாள்களில் பலாத்கார சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துவருவது புள்ளிவிவரங்கள் மூலம் வெளிவந்துள்ளது, மேலும் குழந்தைகள் ஆபாச படங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த சூழலில்தான் தமிழக அரசு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, அமர்வு நீதிபதிகள் இதனை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Loading...

இதன்மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சூழல் உருவாகாமல் இருக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் ஆபாசமாக சித்தரிக்கும் படத்தினை பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending