என்ன நடக்கிறது தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உள்துறை அமைச்சகம் ! முழு தகவலையும் கொடுக்க உத்தரவு !

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் என்றால் தீவிரவாதிகளை முறியடிக்க வேண்டியது ஒருபுறம் என உளவு அமைப்புகள், ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர் இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Loading...

தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் தெலுங்கானா ஆகிய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது, இந்தியாவில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நோய் தொற்று அதிகம் பரவிய மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு, மேலும் டெல்லி மாநாட்டில் அதிக நபர்கள் கலந்து கொண்டதும் தமிழகத்தில் இருந்துதான் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக உளவு அமைப்பு தப்லீக் அமைப்பு தமிழகத்தில் செயல்படுவது குறித்து சேகரித்த தகவல்களை பகிருமாறும், மேலும் தமிழகத்தில் உள்ள மசூதிகளில் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் எந்த அமைப்பின் உதவியுடன் அல்லது நபர்களின் உதவியுடன் தங்கி இருந்தார்கள் அவர்கள் அனைவரையும் கண்காணிப்பில் இருக்கிறார்களா? என்ற விளக்கத்தையும் கேட்டுள்ளது.

Loading...

அத்துடன் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் அவர்களின் முழு தகவலையும் திரட்டி தருமாறும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதே போல் தெலுங்கானா மாநில அரசிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்.

தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் விசா முடக்கபட்ட சூழலில் யாரும் சொந்த நாட்டிற்கு தப்பிவிடாமல் இருக்க அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது, எனவே விரைவில் அனைவரும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரியவருகிறது, இந்நிலையில் தப்லீக் அமைப்பிற்கு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளதாகவும்.

அந்த பணம் 11 வங்கி கணக்குக்களுக்கு மாற்ற பட்டுள்ளதாகவும் சமீபத்தில் செய்து வெளியான நிலையில் அதில் இரண்டு கணக்குகள் தமிழகத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாம், எனவே அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தமிழக அரசு கொடுக்கும் தகவலின் அடிப்படையில் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*