ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு!

ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு-  தமிழக அரசு அறிவிப்பு!

Loading...

தமிழக அரசு ஊரடங்கு நீட்டிப்பை ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் விதமாக இதுவரை நான்கு முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு ஊரடங்கில் கடுமையான பொருளாதார சரிவுகள் ஏற்பட்டதால் அடுத்த இரண்டு ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதுவரையிலான ஊரடங்கு முடிவுகள், நிற மண்டலங்கள் அனைத்தும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.

Loading...

இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றோடு முடியும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அரசு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

  • மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு தடை தொடர்கிறது.
  • பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்கிறது.
  • சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகங்களுக்கு அனுமதி, ஆட்டோவில் ஓட்டுனர் இல்லாமல் 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
  • முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஏசி இல்லாமல் இயங்கவேண்டும்.
  • ஆன்லைன் ஷாப்பிங்குக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*