தமிழகம் முழுவதும் ஊரடங்கு – நாளை மாலை முதல் அமல் !

தமிழகம் முழுவதும் ஊரடங்கு – நாளை மாலை முதல் அமல் !

Loading...

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாளை மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்களை சமூகவிலக்கம் செய்யும் விதமாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவால் அதிக பலன் கிடைக்காது என்றும் குறைந்தது மூன்று வாரங்களாவது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்தன்.

Loading...

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடை, மருந்து கடை உள்ளிட்டவற்றை தவிர்த்து அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு மக்கள் மத்தியில் பாராட்டும் ஆதரவும் கிடைத்துள்ளது. இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என கருத்துகள் எழுந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*