Connect with us

தொழில்நுட்பம்

“LAMB” செயலி அறிமுகம் இனி தமிழகத்தில் யாரும் பேருந்திற்காக காத்திருக்க தேவையில்லை. ஓலா உபேர் போன்று அசத்தல் திட்டம்.

சென்னை,

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி கொண்டிருக்கும் வேலையில் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலை வளர்ப்பது குறித்து சரியான நேரத்தில் அதிரடியாக திட்டங்களை வகுத்து முன்னேறி வருவதுடன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு யுத்திகளை பின்பற்றி தொழிலில் வெற்றி அடைகின்றனர்.

Loading...

தற்போது மத்திய அரசு கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்த UPI BHIM ஆப் மூலம் நொடியில் செல்போனில் இருந்து பணத்தை அனுப்பவும் பெறவும் முடிகிறது ( PHONEPE, GOOGLEPAY, AMAZON PAY ETC.)இது அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Loading...

இந்நிலையில் ஓலா, உபர் நிறுவனங்களை மக்கள் தேடி செல்வதற்கு காரணம் குறைந்த விலையில் வீட்டிலேயே வந்து பிக்கப் செய்து கொள்வதுடன் குறித்த நேரத்தில் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு அழைத்து சென்று விடுகிறார்கள், அந்தவகையில் தற்போது அதிரடியாக தமிழக அரசும் இறங்கியுள்ளது, இனி தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எப்போது எங்கு வரும் என்று பயம் தேவையில்லை பேருந்தின் நேரத்தை அறிந்து குறித்த நேரத்தில் சரியான இடத்திற்கு செல்லும் வகையில் அருமையான ஆப் ஒன்றை தமிழக அரசு உருவாக்கி வருகிறது அதன் பெயர் LAMB.

Locate and Access My Bus (LAMB) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை உருவாக்க முதற்கட்ட உத்தரவுகள் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் என இரண்டு போன்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது . இதன்மூலம் பேருந்தின் எஸ்டிமேட்டட் டைம் ஆஃப் அரைவல், லைவ் லோகேஷன் ஆகியவற்றை தெரிந்து கொள்ள இயலும். அக்குரசி வெறும் ஒரு நிமிடம் என்பதால் இது சரியானதாக இருக்கும் . பேருந்து கடக்க இருக்கும் கடைசி 5 பேருந்து நிறுத்தங்களை அடிப்படையாக கொண்டு இந்த எஸ்டிமேட்டட் டைம் கணக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 21,800 பேருந்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சோதனை முறையாக சென்னையில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு பின்பு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சலோ டெவலப்பர் இந்தியா என்ற ஆப் உருவாக்கும் நிறுவனம் இந்த ஆப்பை உருவாக்கி வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு இதன்மூலம் பேருந்து கண்காணிக்கப்படும் என குறிப்பிட பட்டுள்ளது.

இந்த திட்டம் பலரது மத்தியில் இப்போதே வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அதிமுக எம் பி ரவீந்திரநாத் குமாரின் யோசனையின் பேரில் இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

Loading...

Trending