தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – பீலா ராஜேஷ் சொன்ன தகவல்!

தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – பீலா ராஜேஷ் சொன்ன தகவல்!

Loading...

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக தொற்று எனப்படும் அபாயகர நிலைக்கு செல்லவில்லை என சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழக்த்தில் இன்று புதிதாக அனுமதிக்கப்பட்ட 102 கொரோனா நோயாளிகளையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சமூகப்பரவல் நிலையை தமிழகம் எட்டிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ‘தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாருடைய உடல்நிலையும் மோசமான நிலையில் இல்லை. இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்காவுக்கு சென்று வந்தவர். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. அதனால் அச்சப்பட தேவையில்லை. சமூக பரவல் எனும் நிலைக்கு செல்லவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*