தமிழகத்தில் நான்காவது பலி – அதிர்ச்சியளிக்கும் தகவல் !

தமிழகத்தில் நான்காவது பலி – அதிர்ச்சியளிக்கும் தகவல் !

Loading...

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது.இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ளன.

Loading...

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது. தமிழகத்தில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றாலும் இறப்பு எண்ணிக்கை 1 ஆக இருந்தது ஆறுதல் அளித்தது. நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர் என்பதால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக மாறியது.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 71 வயது முதியவர் இறந்தார். ஆனால் அவரது ரத்த மாதிரி முடிவுகள் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கொரோனாவால்தான் இறந்தார் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*