தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி – அதிகமாகிக் கொண்டே செல்லும் எண்ணிக்கை !

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி – அதிகமாகிக் கொண்டே செல்லும் எண்ணிக்கை !

Loading...

தமிழகத்தில் இன்று மட்டும் 102 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 411 நோயாளிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழகத்தில் நேற்று முன் தினம் வரையில் 309 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் பலியாகி இருந்தார். தமிழகத்தில் எண்ணிக்கை அதிகமாவதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது பெரும்பாலனவர்கள் டெல்லியில் நிஜாமுதீன் எனும் மாநாட்டில் கலந்துகொண்டதுதான். இந்நிலையில் இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவை அடுத்து இந்தியாவில் அதிக பாதிப்பாளர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இன்னும் 400க்கும் மேற்பட்டோர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*