மற்றவர்கள் போல மலிவான அரசியல்… எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினிக்கு பாஜக பதிலடி !

மற்றவர்கள் போல மலிவான அரசியல்… எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினிக்கு பாஜக பதிலடி !

Loading...

ரஜினி டெல்லி கலவரம் குறித்து மத்திய அரசை விமர்சித்ததை அடுத்து அவருக்கு தமிழக பாஜக பதிலளித்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நான் நிற்பேன் என சொன்ன ரஜினிகாந்த் டெல்லி கலவரத்தின் போது இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கு எந்த கணடனமும் தெரிவிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கேலிகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் அவர் நேற்று தன் வீட்டின் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

Loading...

அப்போது பேசிய அவர் ’கலவரத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அடக்காதது மத்திய அரசு நிர்வாகக் கோளாறு மற்றும் உளவுத்துறையின் தோல்வி. ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும் நேரத்தில் இது போல அவர்கள் நடக்க விட்டிருக்கக் கூடாது. குடியுரிமைத் திருத்த சட்டத்தை அவர்கள் திரும்ப பெறபோவதில்லை. அதனால் அதற்கு எதிராகப் போராட வேண்டாம். மதத்தை மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவ்வாறு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக கண்டனம்  தெரிவிக்கிறேன். என்னை பாஜகவின் ஊதுகுழல் என சொல்வது மிகவும் வேதனை அளிக்கிறது.’ எனக் கூறினார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த நேரடியாக பாஜக அரசின் மீதான விமர்சனத்துக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘உளவுத்துறை தோல்வி என சொல்வது ரஜினியின் அறியாமை. மேலும் மற்றவர்களை போல மலிவான அரசியல் செய்வது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*