மதமாற்றத்தை தடுத்து வந்த பாஜக தலைவர் வெட்டி படுகொலை ! தமிழகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு !

மதமாற்றத்தை தடுத்து வந்த பாஜக தலைவர் வெட்டி படுகொலை ! தமிழகத்தில் பதற்றம் அதிகரிப்பு !

Loading...

ஏற்காடு :- ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் சின்ராசு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவராக செயல்பட்டு வந்தவர் சின்ராசு. இவர் இன்று காலை தனது சொந்த ஊரான கொழகூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர் இந்த தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

Loading...

இதுகுறித்து சின்ராசின் அண்ணன் கூறுகையில் தொடர்ந்து மதமாற்றத்திற்கு எதிராக பல்வேறு நிகழ்வுகளை சின்ராசு எடுத்துவந்தான், சமீபத்தில் கூட ஊருக்குள் மதமாற்றத்தில் ஈடுபட வந்த 5 நபர்களை காவல்துறை வசம் ஒப்படைத்தான், நாடு நாடு என்று உழைத்துக்கொண்டிருந்தான், அவனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை, இதுகுறித்து உடனடியாக காவல்துறையினர் விசாரித்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்றும் எனது தம்பியின் மரணத்திற்கு மதம் காரணமென்றால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை, சொந்தக்காரணமா அல்லது மதமா என்பது குறித்து விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*