தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம் !

சென்னை :- உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களை வீட்டில் முடக்கிய கொரோனா வைரஸ் இந்திய மக்களையும் விட்டு வைக்கவில்லை, மேலும் அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கி போட்டுள்ளது, இதில் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பது தமிழக பாஜக.

Loading...

தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின்பு நீண்ட நாட்களாக காலியாக இருந்த மாநில தலைவர் பதவி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக இருந்த முருகனுக்கு வழங்கபட்டது, இதனை அடுத்து தமிழக பாஜக சில மாறுதலுக்கு தன்னை தயார் படுத்தி கொண்ட தருணத்தில் கொரோனா தோற்றால் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலையில் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக எதை நோக்கி செல்லவேண்டும் என சில வழிகாட்டல்கள் டெல்லியில் இருந்து கொடுக்கப்படுகிறது, அதே நேரத்தில் அடிமட்ட நிர்வாகிகளை சரியாக ஒழுங்கு படுத்தவேண்டிய கடமை மாநில தலைமைக்கு உண்டு, இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத அளவில் தமிழகத்தில் பிரதமர் மோடி முதல் அவர்களின் செயல்பாடுகள் வரை எதிர்கட்சிகளால் அதிகம் திசை திருப்ப படுகிறது.

Loading...

இந்த வேலையில் மாநிலத்தில் உள்ள வழக்கறிஞர் அணி முறையாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது, காரணம் பல இடங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கிய நபர்களை சட்ட நடவடிக்கை எடுத்து மீட்டார்களா என்பது கேள்வி குறிதான் ! நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிராக பொய் விஷம கருத்துக்களை தேர்ந்து எடுத்த ஊடகங்களே வெளியிட்டு வருகின்றன.

அவர்களை தொடர்பு கொண்டு பேசுவதோடு நில்லாமல் online, youtube போன்ற ஊடகங்கள் மீது அவர்களுக்கு வருமானம் வரக்கூடிய இடங்களில் தவறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி நிரூபித்தால் விளம்பரம் மூலம் வரும் வருமானம் நிறுத்தப்படும். தமிழகத்தில் பலர் மோடி எதிர்ப்பை கையில் எடுப்பதற்கு காரணமே சமூக ஊடகங்களில் பரப்ப படும் பொய்கள் தான் இதனை முறியடிப்பது வழக்கறிஞர் பிரிவு, சமூக ஊடக பிரிவு, என அனைத்தையும் கையில் வைத்திருக்கும் பாஜகவால் எளிதில் முடியும்.

இந்த நேரத்தில் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து கொண்டு செயல்படாதவர்கள் மற்றும் மாற்று கொள்கை கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதே சரியாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டு தமிழக தலைமைக்கும் மற்றும் டெல்லி தலைமைக்கும் ஆலோசனைகள் அனுப்ப பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஜூன் மாத இறுதியில் தமிழக பாஜகவில் பல பதவிகள் பொறுப்புகள் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதில் முன்னாள் தலைவர்களும் உள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. இனி தமிழகத்திற்கு தேவையான அரசியல் வழியை தீர்மானித்து நேரடியாக களத்தில் இறங்குவதுதான் தமிழக பாஜகவிற்கு சரியானது !!

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*