தமிழக பாஜகவை கட்டுப்படுத்தியதா சூர்யா குடும்பம்? உதவிய அரசியல்வாதி யார்? ஏன் பாஜக அறிக்கை வெளியிட்டது?

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசிய சர்ச்சை கருத்து தமிழக மக்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது, பலரும் கண்டனங்களை பதிவு செய்ய கம்யூனிஸ்ட் மற்றும் நாத்திகம் பேசும் பெரியாரிஸ்ட் அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Loading...

கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தினை பதிவு செய்த நடிகை ஜோதிகாவிற்கு தொடர் எதிர்ப்பு கிளம்பியது, அதனை தொடர்ந்து நாங்கள் ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக ஜோதிகாவின் கணவர் சூர்யா அறிக்கை விட அதனை கடவுள் நம்பிக்கை அற்ற பெரியாரிஸ்ட் அமைப்புகள் கொண்டாடி வரவேற்றனர், ஆனால் இந்து அமைப்புகள் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பாஜகவினர் ஜோதிகா கருத்திற்கு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர், இந்த நிலையில் தான் பாஜக பிரமுகர் கல்யாண் ராமன் கடுமையான விமர்சனங்களை நடிகை ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தின் மீது வைத்திருந்தார் , அவரது கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில் திடீர் என பாஜகவில் இருந்து கல்யாணராமன் எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் அவரது கருத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

Loading...

இந்நிலையில் ஏன் இதுபோன்று அறிவிப்பு இப்போது வரவேண்டும் ஒரு வேலை தமிழக பாஜக ஜோதிகாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு கல்யாண் ராமன் கருத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை வெளியிட்டனரா என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை முன்வைத்தனர்.

இந்நிலையில் ஏன் அவ்வாறு அறிக்கை வெளியானது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது, ஜோதிகா குறித்து விமர்சனம் செய்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் அரசியல் வாதி ஒருவரிடம் சூர்யா குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் கோரிக்கை வைத்ததாகவும் அதனை ஏற்று அவரின் தலையீட்டின் பெயரில்தான் கல்யாணராமன் குறித்து பாஜக அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பலரும் சமூக வலைத்தளம் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், திமுக போன்ற கட்சிகள் மிகவும் கீழ்த்தரமாக பிரதமர் முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்துவரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை ஆனால் பதிலடி கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படுகிறது என வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தேசிய சிந்தனை கொண்ட பாஜகவா இல்லை திராவிட சிந்தனை கொண்டவர்கள் நிரம்பியிருக்கும் பாஜகவா எனவும் கண்டித்து வருகின்றனர். தொண்டர்கள் பக்கம் நிற்கவேண்டிய தலைவர்கள் அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு எதிர் தரப்பு கூட கூட்டணி அமைத்து செயல்படுவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*