காஞ்சி மடத்துக்கு ஆசி வாங்க சென்ற தமிழக பாஜக தலைவர்- சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம் !

காஞ்சி மடத்துக்கு ஆசி வாங்க சென்ற தமிழக பாஜக தலைவர்- சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம் !

Loading...

தமிழக பாஜக தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல் முருகன் காஞ்சி சங்கர மடத்துக்கு ஆசி வாங்க சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தில் தமிழக பாஜக தலைவர் யார் அறிவிக்கப்படுவார் என்று பல யூகங்கள் வெளியாகியது. ஆனால், எல்லா யூகங்களையும் புறம் தள்ளிவிட்டு பாஜக தேசியத் தலைமை, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக அறிவித்தது . இதன் மூலம் தமிழக பாஜகவின் தலைவராகும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2வது தலைவர் என்று பாஜக வரலாற்றில் பதிவாகினார் முருகன்.

Loading...

இந்நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் முருகன் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக காஞ்சி சங்கரமடத்துக்கு அவர் ஆசி வாங்கப் சென்றார். அப்போதி அவரை அமர சொல்லாமல் நிற்கவைத்தே பேசியுள்ளார் மடாதிபதி விஜயேந்திரர். இது சம்மந்தமானப் புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*