Connect with us

#24 Exclusive

தமிழக கோவிலுக்குள் புகுந்து மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்த பெண்கள் ( வீடியோ இணைப்பு )

Published

on

சமூகவலைத்தளம்.,

நாளுக்கு நாள் தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்து வருவதாகவும் இதனால் தமிழர்களின் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் வேலையில் கன்னியாஸ்திரி மற்றும் இரண்டு கிறிஸ்துவர்கள் இந்து ஆலயத்திற்குள் சென்று மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாரும் பொது இடங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கு சென்று மத பிரச்சாரத்திலோ அல்லது மதமாற்றம் குறித்து பேசக்கூடாது என்று சட்டம் இருகையில் பெரும் பாலும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நபர்கள் இந்துக்கள் பகுதிகளில் சென்று மதமாற்றத்தில் ஈடுபடுவதை பலரும் சமூகவலைத்தளங்களில் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இது போன்று மத பிரச்சாரம் செய்வது இரண்டுதரப்பு மக்களிடையே மத மோதலை தூண்டும் என்பதனை அறியாமல் அரசாங்கமும் கண்டும் காணாமல் இருப்பதாக பேசப்படுகிறது இந்நிலையில் கன்னியாஸ்திரி மற்றும் புதிதாக திருமணமான தம்பதியினர் இருவர் கோவிலுக்குள் திருமணம் ஆகாத பெண்களை குறிவைத்து நான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய அடுத்த மாதமே திருமணம் நடந்துவிட்டது என்றும் முதலில் நீங்கள் மாறுங்கள் பிறகு உங்கள் கணவரையும் மாற்றி கொள்ளலாம் என்றும் பேசியுள்ளனர்.

இவை அனைத்தும் பொது வெளியில் நடந்துள்ளது, இதனை கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் மூவரையும் கோவிலை விட்டு விரட்டியதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரை தொடர்பு கொண்டு அவர்களை வரவைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒன்று எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை முதலில் வீடுகளுக்கு வந்தார்கள் இப்போது கோவிலுக்கே வந்துவிட்டார்கள் இதுபோல் இந்துக்கள் அவர்கள் வழிபாட்டு தளங்களுக்கு சென்றால் என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்ட மூவர் :-

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com