இது கூட தெரியாமல் ஒரு எம் பி இருக்கலாமா? இதில் விளம்பரம் வேறு எடுத்து செல்லுங்கள் தமிழச்சி தங்கபாண்டியன் விரட்டி அடிப்பு கூடவே ஒரு உண்மையும் வெளிவந்தது !!

அதிகம் படித்தவர், எழுத்தாளர், கவிதை நயத்துடன் பேசுபவர் என்ற காரணங்களை முன்வைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றியடைய செய்யவேண்டும் எனவும் அவர் வெற்றி பெற்றால் நிச்சயம் தொகுதி மக்களின் குறையை கனகச்சிதமாக நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்லி நிறைவேற்றுவார் என்று கூறி திமுக தரப்பில் வாக்குகள் கேட்கபட்டது.

Loading...

அவரும் எதிர்பார்ப்பை தாண்டி பல நேரங்களில் நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சர்களை சந்தித்தும் கோரிக்கை மனுவினை அளித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார், ஆனால் இந்த நிலையில்தான் தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியை பார்த்து புகார் ஒன்றிணை அளித்தார் அதில் தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி, ஒக்கியம், துரைப்பாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் டோல் கேட்கள் உள்ளன.

இவற்றை கடப்பதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகின்றது எனவும் இதனால் போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது எனவும் உடனடியாக இதனை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவினை அளித்தார். இந்த நிலையில்தான் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார் எம் பி தமிழச்சி, தமிழச்சி மனு கொடுத்த 5 சுங்கச்சாவடிகளுமே மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதாம்.

Loading...

அதை நீக்க வேண்டும் என்றால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் போதுமாம், முறைபடி இந்த புகாரை தமிழச்சி தங்கபாண்டியன் தமிழக அரசிடம் அளித்திருக்க வேண்டுமாம், இன்னும் ஒரு கவலை அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் இந்த சுங்க சாவடிகள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாம், அதில் சில சுங்க சாவடிகளை திமுகவினரே இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தான் எப்போது பார்த்தாலும் திமுகவினருக்கு விளம்பரம் தேடுவதே வேலையாகி போய்விட்டது, எந்த மனுவை யாரிடம் கொடுக்கவேண்டும் என்றுகூட தெரியாதா? அடுத்த ஆட்சி உங்கள் ஆட்சி என்றுவ்சொல்கிறீர்களே அப்படியானால் உங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்ததும் சுங்க சாவடி அகற்றப்படும் என கூறுங்கள் அதை செய்யமாட்டீர்கள் எல்லாம் ஒரு விளம்பரம் மனுவை எடுத்து செல்லுங்கள் என உதவியாளரிடம் கடிந்து கொண்டுள்ளாராம் முக்கிய துறை அதிகாரி.

அனைத்திலும் விளம்பரம் அடடே எந்த மனுவை எங்கே கொடுக்கவேண்டும் என தெரியாமலா ஒரு எம் பி இருக்கிறார், என பலரும் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர், இதில் முக்கிய உண்மை என்னவென்றால் சுங்கச்சாவடிகளை நிர்வாகம் செய்வது யார் என்ற உண்மை வெளிவந்ததால் திமுக ஆட்சியில் இவை நீக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*