Connect with us

#24 Exclusive

தமிழகத்திலும் பரவியதா கொடிய கொரனோ வைரஸ் ? உடனடியாக இந்த மூன்று முறையை பின்பற்ற அறிவுறுத்தல் !

இந்தியாவில் முதல்முறையாக சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரனோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திவெளியிட்டுள்ளது, அதே நேரம் சீனாவில் இருந்து திரும்பிய கோவையை சேர்ந்தவருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் இந்தியாவிலேயே கேரளாவில் உள்ள மாணவனுக்கு மட்டும்தான் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உயிர்க்கொல்லி வைரஸான கரோனா வைரஸ் தற்போது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனா மட்டுமின்றி பல நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கரோனோ வைரஸ் குறித்து அனைத்து நாடுகளிலும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 170  பேர் உயிரிழந்துள்ளனர். 7000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.

கரோனா வைரசை ஆறு வகைகளாக பிரித்துள்ள மருத்துவர்கள் வழக்கமாக விலங்குகளிடையேதான் இவை காணப்படும் என்றும் மனிதர்களின் உயிரை குடிக்கும் கொலைகார வைரஸாக மாறியது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.
இது வழக்கமான சளித்தொல்லை போல் இருமல். தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ்.., இருமல், தும்மல், கைகுலுக்கல் மூலம் பரவும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டபின் வாய், கண்கள் மற்றும் மூக்கை தொட்டால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Loading...

கொரோனா வைரஸ் தொற்றினால் காய்ச்சலுக்கு தரும் மருந்துகளையே தரும் மருத்துவர்கள் திரவ உணவு, ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்கிறனர். இதற்கு தடுப்பூசி ஏதும் கிடையாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பெரிதும் காப்பாற்றும், விலங்குகள் அருகில் செல்வதையும், உடல் நலம் குன்றியோர் அருகில் செல்வதையும் தவிர்க்கும்படி சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீன அரசும் மனிதர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சாப்பிடவேண்டும் எனவும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும், தும்மல் வரும்போது கர்ச்சிப் கொண்டு மூடி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

Loading...

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சி படிப்பிற்காக சீனா சென்றவர் உட்பட இந்தியர்களை மீட்க சீனாவிற்கு தனி விமானம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அங்கு உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களை தனி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Loading...

Trending