Connect with us

#24 Exclusive

நீதிபதி விஷயத்தில் பொய் செய்தியை பரப்பிய ஊடகம் உண்மையை போட்டுடைத்த சாமானியர் தடை செய்ய படுகிறதா பிரபல ஊடகம்?

டெல்லியில் நடைபெறும் கலவரங்கள் குறித்து ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பிட்ட மதத்தினருக்கும் அரசியல் கட்சிக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு மிகப்பெரிய பொய் செய்தியை திரித்து ஊடகங்கள் வெளியிட்டுவருவது குறித்து கண்டறியப்பட்டுள்ளது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டெல்லியில் நடைபெறும் கலவரங்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில பாஜக தலைவர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் வேறு நீதி மன்றத்திற்கு மாற்ற பட்டதாகவும் பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியதால் அவரை இடம் மாற்றம் செய்திருப்பதாக தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் இன்று காலை முதல் தகவல்களை பரப்பி வருகின்றன, இது குறித்து சாமானியர் விஜயகுமார் என்பவர் உண்மை என்னவென்று போட்டு உடைத்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :

Loading...

நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பர் உண்மை என்ன?காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை மாதிரி டெல்லி வன்முறையை விசாரித்து
பிஜேபி தலைவர்களின் பேச்சினால் தான் வன்முறை வந்தது என்று புதிய கண்டு பிடிப்பு நடத்தி நேற்று பரபரப்பு காட்டிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட
சம்பவத்தை பிஜேபி அரசின் பழிவாங்கல் என்று கூறுகிறார்கள்.

Loading...

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் பணி உயர்வு பணி நியமனம் பணி இடமாற்றம் ஆகியவற்றை கொலிஜியம் என்கிற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின்
தலைமையில் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு தான் தீர்மானிக்கும் தீர்மானிக்க முடியும் என்பது இந்திய நீதித்
துறையின் கட்டமைப்பு ஆகும்..

5 பேர் கொண்ட ஒரு அமைப்பு தனியாக அமர்ந்து இவரை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் இவரை அந்த உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் ரகசியமாக முடிவு செய்து அதை ஜனாதிபதிக்கு அனுப்பி
வைக்கும். அதில் ஜனாதிபதி கையெழுத்து போடுவார். அதை மத்திய அரசு செய்யும் அவ்வளவு தான் அரசும் ஜனாதிபதியும் கொலிஜிய முடிவில் தலையிட முடியும்.

இதை மாற்றி பொது வெளியில் கொண்டு.வர வேண்டும் என்று மோடி அரசு 2014 ல் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை உருவாக்கி அதை செயல்படுத்த லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றில் தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவே ற்றி சட்டமாக்கியது.ஆனால் நீதித்துறையில் எப்படி மோடி தலையிட முடியும்? என்று உள்ளூர் வக்கீல் முதல் உச்சநீதிமன்ற வக்கீல் நீதிபதி என்று பலரும்
எதிர்ப்பு தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஒரு
பெஞ்ச் அமைத்து பேருக்கு விசாரணை செய்து நாடாளுமன்றம் உருவாக்கிய ஒரு
சட்டத்திற்கு தடை விதித்தது.

ஆக பிரதமர் ஜனாதிபதி ஆகியவர்களை விட இந்த கொலிஜியம் அமைப்பு தான் நீதித்து றையில் சர்வ அதிகாரமும் கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு
கடந்த 12 ம் தேதி மத்திய அரசுக்கு ஒருபரிந்துரை செய்தது.
அதாவது மூன்று மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்ற வேண்டும் என்று மத்தியஅரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. இதில் முதலில் இருக்கும் பெயர் யார் தெரியுமா?

டெல்லி ஐகோர்ட் நீதிபதி முரளிதர் தான். அதாவது நேற்று பிஜேபி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆர்டர் போட்ட அதே நீதிபதிதான்.இரண்டு வாரங்களுக்கு முன்பே அதாவது
பிப்ரவரி 12 ம் தேதியே கொலிஜியம் பரிந்துரை செய்து ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டிய லிஸ்டில் இருந்த நீதிபதியை ஓகே டன் என்று ஜனாதிபதி கையெழுத்து போட்டு உத்தரவு
பிறப்பித்து இருக்கிறார்.

கொலிஜியம் அளித்த ட்ரான்ஸ்பர் லிஸ்டை ஜனாதிபதி பார்த்து ஓகே என்று வெறும் கை எழுத்து போட அவரால் வேறு என்ன செய்ய முடியும்? என்கிறீர்களா..அதுவும் சரி தான்.
ஜனாதிபதி மேஜையில் டெல்லி நீதிபதி முரளிதரை பஞ்சாப் ஹரியானா வுக்கு மாற்ற கொலிஜியம் கொடுத்த பைல் 14 நாட்கள்இருந்துள்ளது. இந்த தாமதம் நிர்வாக ரீதியாக நடைபெறும் ஒரு சாதாரண விஷயம் தான்.

அது மட்டுமல்லாது இந்த வழக்கு 2 நாட்களு க்கு முன்பே முரளிதர் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.அதனால் அவரை மாற்றாது தீர்ப்பு அளித்த பிறகு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார்..உடனே மோடி அரசின் பழி வாங்கும் நடவடிக்கு என்று ஒப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பே முடிவானநீதிபதி முரளிதரின் ட்ரான்ஸ்பரை டெல்லிகலவரத்தில் பிஜேபி தலைவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கூறியதால் தான்
நடை பெற்றது என்று பொய் செய்தியை பரப்புகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அரசியலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்கு சென்ற எம் பி ஒருவரின் செய்தி நிறுவனம் திட்டமிட்டு பொய் செய்தியை பரப்புவதாகவும் நீதிபதி பணியிடம் மாற்றத்தில் கூட வேண்டுமென்றே போலி செய்தியை திரித்து வழங்குவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதுவரை அந்நிறுவனம் மீது 16 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் அத்தொலைக்காட்சி தடை செய்யப்படுமா என்பது குறித்து வருகிற மார்ச் 4 ம் தேதி முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending