Connect with us

#24 Exclusive

தமிழில் கும்பாவிஷேகம் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நீதிமன்ற முடிவால் ஏற்பட்ட சோகம் !!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்.5ம் தேதி குடமுழக்கு விழா நடக்கிறது. சைவ சமய நெறிப்படி அமைக்கப்பட்ட இந்த கோயிலில் 1997ல் பிரதிஷ்டை விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டதால் அப்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பலர் இறந்தனர். தற்போது பிப்.5ல் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மோர் பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோரது அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. நீதிபதிகள் நேற்று காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.சரவணன் என்பவர் சார்பில், ‘தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறவில்லை. எனவே, தொல்லியல் துறை அனுமதி பெறவும், அனுமதியின்றி குடமுழுக்கு நடத்த தடையும் விதிக்க வலியுறுத்தி மனு செய்யவுள்ளதாக’ கூறப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதிகள் எம்.துரைசுவாமி மற்றும் டி.ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது கோயில் தேவஸ்தானம் சார்பில், ‘குடமுழுக்க நடத்த மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓதுவார்கள் மூலம் தமிழ் பெருமுறை மந்திரங்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை இசைக்கப்பட உள்ளது. இதற்கென ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அந்த விபரம் அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

Loading...

கடந்த 1997ம் ஆண்டு தீ விபத்து நடந்ததால் இம்முறை யாக குண்டங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு சார்பில், ‘குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளில் நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.மனுதாரர்கள் தரப்பில், ‘குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க உறுதி செய்யப்பட வேண்டும்.

Loading...

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்லூரிகளில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். குடமுழுக்கு விழாவை அவர்களும் பங்கேற்று நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, ‘தமிழக அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

தற்போது இந்த வழக்கில் தமிழில் மட்டுமே குடமுழக்கு விழா நடத்தவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது, அதாவது இருதரப்பு வாதத்தையும் ஏற்ற மதுரை நீதிமன்றம் குடமுழக்கு விழாவினை எந்த மொழியில் நடத்தவேண்டும் என்பது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்தி வைத்தது, சாஸ்திர சம்பரதாயங்களில் நீதிமன்றம் உள்ளே சென்று விசாரணை நடத்துவதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் விழுப்புரத்தை சேர்ந்த சலீம் என்பவர் மசூதிகளில் இனி தமிழில் தொழுகை நடத்த உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடர இருப்பதாக வெளியான செய்தியால் யாரெல்லாம் இந்து மதம் குறித்து கருத்து தெரிவித்தார்களோ அவர்கள் முழுவதும் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது,

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending