Connect with us

#24 Exclusive

தமிழன் இந்து இல்லை என சொல்லிக்கொண்டிருந்த கூட்டம் திடீரென தஞ்சை கோவிலில் கூடுவது ஏன் பானு கோம்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல் !!

தஞ்சை பெரிய கோவில் கும்பாவிஷேக விழாவினை தமிழில் நடத்தவேண்டும் என்று தற்போது சில இயக்கங்கள் போராடி வருகின்றன, இதுவரை தஞ்சை பெரியகோவிலில் சென்று சிவனை தரிசிக்காதவர்கள் கூட கும்பாஷேகம் விழாவினை தமிழில் நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர், அதிலும் ஆச்சர்யம் என்னவென்றால் இந்துக்களே அல்லாத மாற்று மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் திடீரென இந்து கோவில்களில் தமிழில் கும்பாவிஷேகம் என போராட்டத்தில் ஈடுபடுவது ஏன் என பானு கோம்ஸ் கூறியுள்ளார் அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :-

சமீப காலமாக …தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லிக் கொண்டிருந்த இந்துவிரோத அரசியல் குரல்கள் & மத மாற்ற குரல்கள் அனைத்தும்…தங்களுடைய உத்தியை மாற்றிக் கொண்டு ….
பழங்கால இந்து கோவில்கள் அனைத்தும் ..தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் சொந்தமானது. உரிமையுள்ளது. ஏனெனில்..அன்றைய மன்னர்கள், மக்கள் வரிப்பணத்தில் தான் கோவில்களை நிர்மாணித்தார்கள் என்றெல்லாம் இந்துவிரோத அரசியல் துணையோடு பேசத்தொடங்கி இருக்கிறது! இந்து வெறுப்பாளர்களும், மாற்று மதத்தினரும் இத்தகைய கோவில்களில் சென்று போட்டோக்களையும் பதிவிடுகிறார்கள்.

Loading...

இந்து ஆலயங்களுக்கு பிற மதத்தினர் வரக்கூடாதா ? என்றால்… தாராளமாக வரலாம். வழிபடலாம். போகலாம்.
ஆனால்….இங்கு..இந்துவிரோத அரசியல் …இந்து கோவில்களில் மாற்று மதத்தினருக்கும் உரிமை உண்டு என்பதாக ஒலிக்கத் துவங்கி இருக்கிறது…என்பது தான் கவனிக்க தக்கது.

Loading...

காரணம் என்ன ?
தமிழகத்தின் இந்து ஆன்மீகத்தை காத்து நிற்பவை …இங்குள்ள பிரமாண்டமான பழங்கால தொன்ம கோவில்கள். இவற்றில் கடைபிடிக்கப் படும் பூஜா முறைகள், அவற்றின் அடிப்படைகள் அனைத்தும் இந்து ஆகம விதிமுறைகளின் படி நடப்பவை. உறுதிப்படுத்துபவை . இவற்றை ஊடுருவி அழித்தொழிப்பதன் மூலம் …இவற்றின் மீதான இந்து ஆன்மீக மதிப்பை அழிக்க முடியும். இக் கோவில்களில் இருந்து மக்களை நம்பிக்கையளவில் விலகிச்செல்ல வைக்க முடியும். இது மத மாற்றிகளுக்கு ஆதாயம், அசையும் அசையா சொத்துக்களை பெருமளவில் கொண்டிருப்பவை கோவில்கள் என்பது ஊழல் அரசியலுக்கு ஆதாயம் .

இதற்கும் மாற்று மதத்தினரை குறை சொல்ல முடியாது.மத மாற்றிகளின் துணையோடு இத்தகைய விஷ பிரச்சாரங்களை முன்னெடுக்கும்/ இயக்கும் இந்து விரோத சுயலாப அரசியலை தான் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

Trending