Connect with us

#24 Exclusive

பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் இயக்குனர் ! ரசிகர்கள் வாழ்த்து !

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியவர் இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்துள்ளார், அவருக்கு பாஜகவினர் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் பேரரசுவிற்கு என்று ஒரு தனி பக்கம் உண்டு ஊர் பெயர்களில் குறிப்பாக கோவில் நகரங்களின் பெயர்களில் அதிக அளவு திரைப்படம் எடுத்தவர், அப்போது முன்னணி ஹீரோவாக வலம்வந்த விஜயகாந்த்தினை வைத்தும் திரைப்படம் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு பெரியாரிஸ்ட்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியபோது, முதலில் இதுநாள்வரை இந்து கடவுள்களை அவமானப்படுத்திய பெரியாரிஸ்ட்கள் இந்துக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இனியும் இந்துக்கள் குறித்து அவதூறாக யார் பேசினாலும் அவர்கள் மீண்டும் அதுபோன்று பேசாத வண்ணம் தக்க பதிலடியினை இந்துக்கள் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

Loading...

அவரது கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் ஆன்மீக கருத்துக்களை பேரரசு கூறிவந்தார், இந்த சூழலில்தான் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் இயக்குனர் பேரரசு, தொடர்ந்து தமிழர்கள் மத்தியில் மோடியின் திட்டங்களை கொண்டு சேர்ப்பேன் எனவும்,.,

Loading...

பாரத நாட்டின் பெயரையும், பண்பாட்டினையும் கெடுக்கும் விதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி போராடுவேன் எனவும் பேரரசு குறிப்பிட்டுள்ளார், பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் பாஜவினர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர் பிரதமர் தமிழகம் வரும் நாட்களில் அவரை பேரரசு சந்தித்து பேசுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending